அம்மா இல்லாத வானமும் சில பட்டாம்பூச்சிகளும்…

ம்மாவிற்கும் எனக்கும் 
நிறைய ரகசியங்கள் இருந்தன
தொப்புள்கொடி தூரத்தைக் கூட 
அவளுடைய அன்புதான் அறுத்துப்போட்டிருந்தது;

எனக்குச் சொல்ல அம்மா எப்போதுமே
நிறைய வைத்திருப்பாள் 
நானும் வைத்திருப்பேன், இனி 
அவற்றை யெல்லாம் யாரிடம் சொல்ல?

காற்றிற்கு சொன்னால் கேட்குமாம் 
மழையிடம் சொன்னால் சொல்லுமாம் 
அம்மாவைத் தொட முடியாததை 
காற்றிடமோ மழையிடமோ சொல்லி என்னச் செய்ய ? 

இங்கு தான் இருப்பாள் அம்மா என்கிறார்கள் 
என்னோடு தான் இருப்பாள் என்கிறார்கள், ஆனால்
தொட்டுப் பார்க்க முடியாத அம்மாவின் முகம் 
சிரித்துக் காணக் கிடைக்காத அம்மாவின் முகம்
ஒன்றுமில்லாத வானத்தில் மிக வலிக்கும் கோடுகள் அவை; 

கோடுகளை அழிப்பதும் அம்மாவை மறப்பதும் 
மிகப்பெரிய போராட்டம் அம்மா இல்லாதவர்களுக்கு
உண்மையில் அம்மா இறந்துவிட்ட மகன்கள் தான் 
உலகில் யாருமற்று வாழ்பவர்கள்; 

தனியே உண்ண சொல்லிக்கொடுத்தவள் 
தனியே உலகம் பயணிக்க சொல்லித்தந்தவள் 
தனியே அழக்கூடாது என்றெல்லாம் சொன்னவள் கொஞ்சம்
அவளில்லாது வாழ்வதைப் பற்றியும் பேசியிருக்கலாம்;

அம்மாக்கள் ஆனால் இரக்கமற்றவர்கள் 
இரக்கமிருந்தால் மகன்களைவிட்டு இறப்பார்களா ? 
இதயம் உடைந்தழுதால் இப்பிரபஞ்சம் நனைந்துவிடும் 
அப்படி கணக்கிறாள் அம்மா உள்ளே;

அம்மாவை எண்ணியழும் மனது
கடலைவிட மிக ஆழம் மிக்கது, 
மலைகளைவிட மிகப்பெரிது 
அவளுடைய சொற்களெல்லாம்;

அவள் நானாகவும் நான் அவளாகவும் 
வாழ்ந்த நினைவுகளைப்போல ஒரு தவமில்லை, 
அம்மாவைப்போல ஒரு வரமேயில்லை 
அம்மா தான் வாழ்வின் சந்தோசங்களின் ஒற்றைச்சொல்;

அவளில்லாமலும் இதோ அந்த மஞ்சள்பூக்கள் பூக்கிறது
பட்டாம்பூச்சிகள் கூட அன்றைப்போலவே பறக்கின்றன
நாட்களென்னவோ வேறு வேறென்றாலும்
பொழுதுகளின் வண்ணம் மாறுவதேயில்லை;

பகலும் இரவும் மாறி மாறி 
வருடங்கள் எத்தனை மாறினாலென்ன
என் சின்ன இதயத்துள் அவள் மட்டும் மாறாமல் 
நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறாள்;

உயிரணையும் விளக்கின் கடைசித் துளி
வெளிச்சத்தைப்போல, வாழ்க்கை என்னவோ
கொஞ்சந் தானென்றாலும் அவளின் நினைவின் 
பெருவெளியில் தான் நீள்கிறதென் நாட்கள்;

அவளென்ன, அத்தனைப் பெரிதா என்கிறார்கள்
இல்லை, அவள் அத்தனைப் பெரிதில்லை
அவள் மிகச் சிறியவள், என் இதயத்தினளவு தான் அவள்
உயிரின் கூடு அவள்; என் அம்மா, என் செல்ல அம்மா!
-----------------------------------------------------
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s