Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

அம்மாப் பேச்சு…

சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து தான் எனக்கான மீதநாட்களே நீள்கின்றன அவள் சொல்லிலும் இனிய சொல்லாள் இதயத்திலும் ஆழம் உள்ளாள்; … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

திறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்