Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

உடைந்த கடவுள் – 32

எனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்! ————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

‘எப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர் ‘ஏன்’ என்றேன் ‘சரி என்ன சொன்னால் கோபப் படுவீர்கள் என்றார் ‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென் ‘அப்போ உங்களுக்கு கோபமே வராதா’ என்றார் ‘நான் சொன்னேனா’ என்றென் ‘அப்போ கோபப் படுவீர்களா’ என்று கேட்டார் ‘படலாம்’ என்றேன் ‘கோபப் அப்டுவீங்களா?!!! கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 30

உண்ண உணவில்லாதவர்கள் கோல்கேட் பற்பசை பற்றியோ குச்சி வைத்தாவது பல் துலக்காதது பற்றியோ வருத்தம் கொள்வதேயில்லை’ என்று குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே நம் சமுதாய பற்று – மனம் நிறைந்து கொள்கிறது! ———————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 29

தெரு வுடைத்து தார் பிரித்து ஜல்லிகள் நிரப்பி வேர்வையில் ஊறிப் போகும் தொழிலாளிகளின் கால் வெடிப்பும், வயிற்றுப் பசியும், தெருவோர தூசிகளில் தூளிகட்டி – கிழிந்த புடவியின் வழியே அம்மா வருவாளா தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும் ஏக்கத்தின் தடங்களும் தன் அடையாளங்களை நல்ல தார்சாலையாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன! ————————————————————————

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 28

இட்லி கடை வாசலில் கைக்குழந்தையோடு ஒரு பிச்சை காரி நிற்கிறாள்; நான் கை கழுவிக் கொண்டு அவளுக்கு ஒரு பொட்டலம் கட்டச் சொன்னேன், ‘நீ ஏய்யா பசியோட போற இவளுங்க இப்படி தான், பொய்யி; அது யார் பெத்த குழந்தையோ இவ தூக்கிக்குனு அலையறா, ‘தா போ அங்குட்டு; அந்த கடைக்கார தாய் எனக்காக அவளை … Continue reading

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்