Category Archives: எத்தனையோ பொய்கள்

சின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..

ஹைக்கூ –89

இருக்கும் காற்றிற்கும் சுடும் நெருப்பிற்கும் அணைக்கும் நீருக்கும் அணைக்கும் பூமிக்கும் அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும் எனக்கும் உனக்குமிடையே ஒரு ஈர்ப்பு தெய்வீகமாய் இல்லாமலில்லை இருக்கென்றும் உணர மட்டுமே மானிடப் பிறப்பானோம்!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –88

யாரையும் வணங்கவில்லை நான் யாரையும் கெடுக்கவில்லை நான் யாவரும் நானாக பாவிப்பதில் நீயும் நானும் – கடவுளாவோம் வா..

Posted in எத்தனையோ பொய்கள் | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –87

மரக் கட்டைக்கு பொட்டு வைத்ததில் பக்தனானவன் மரக்கட்டை என்று சொன்னதில் பித்தனானேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –86

நெருப்பு மிதித்து நிரூபிக்க – கேட்டிடாத சாமிக்கு தான் மிதித்து மிதித்து மிதித்து எரிகிறது சாமி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –85

வேல் குத்தி வலிக்கவில்லை வழிந்த ரத்தத்தில் மூடத் தனம் ஒன்றும் மூடிக் கொள்ளவுமில்லை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக