Category Archives: கண்ணீர் வற்றாத காயங்கள்..

எழுதாத தலையெழுத்திற்கு, அழுதுத் தீர்த்த தருணத்தை; எழுதியேனும் வைக்கத் துணிந்தப் பதிவு..

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!!

எங்கள் வீட்டை அன்று நாங்கள் வெடிசப்தமில்லா தருணத்தில் தான் கட்டினோம்.. இன்று அந்த வீடும் வீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும் சல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது காய்ந்த ரத்தமுமே இருக்கிறது.. நாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து அழுகிறோம் அந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று எங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்.. ஒருவேளை அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..

உயிர் உயிர் உயிரென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே உதிர்கின்றன எம் உயிர்கள்.. தானாடாவிட்டாலும் தசையாடும் வர்கத்தின் உயிர்வாடிப் போகிற தொப்புள்கொடி உறவுகளெல்லாம் ஒவ்வொன்றாய் அறுகிறது.. மனதிற்குள் சுமக்கும் உறவில்லை உயிர் உணர்வு முழுதும் ஒரு இனமென்று கலந்த தமிழ்ரத்தமது’ சுடுகாற்றில் உறைகிறது.. சொட்டச் சொட்ட வலிக்கும் கணம் கடப்பதற்குள் ஆறாய் பெருக்கெடுக்கிறது மீண்டும் அதே தீராக் கண்ணீர்.. ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

அத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ? உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்