Category Archives: சின்ன சின்ன கவிதைகள்

எதையோ சொல்ல வந்த துணிவில் எதையோ சொல்லிப் போன அவசர வார்த்தைகள்!

ஞானமடா நீயெனக்கு (45)

நான் உன் அம்மாவிடம் பேச தொலைபேசியில் அவளை அழைத்தேன்; நீ தொலைபேசியை அவளிடமிருந்து பிடுங்கி அப்பா அப்பா என்று கத்தினாய்; முதல் முறையாக கிரஹம்பெல்லினை மனதார பாராட்டினேன்!! ——————————————

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (44)

நீ எனை அம்மா என்பாய் – அம்மாவை அப்பா என்பாய், யாரை எப்படி அழைக்கிறாய் என்பதில் ஒன்றுமேயில்லை; இருவரையுமே அழைக்கிறாய் என்பதில் நிறைவானோம் இரண்டு பேருமே!! —————————–

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (43)

தின்பண்டங்களை வீடெல்லாம் இரைத்தாய், அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; ஓயாமல் மேலும் கீழுமாய் எகிறி எகிறி குதித்தாய் ஏக சேட்டைகள் செய்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; அம்மாவின் முடி பிடித்து இழுத்தாய் தலையிலேறி அமர்ந்தாய் அம்மா சொன்னாள் ‘அப்பாவிடம் சொல்லிவிடுவேன்’ அமைதியானாய்; எல்லாவற்றிலுமே அம்மா என் பெயரை சொன்னதும் பயந்து அமைதியானாய் … Continue reading

Posted in சின்ன சின்ன கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 32

எனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்! ————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 30

உண்ண உணவில்லாதவர்கள் கோல்கேட் பற்பசை பற்றியோ குச்சி வைத்தாவது பல் துலக்காதது பற்றியோ வருத்தம் கொள்வதேயில்லை’ என்று குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே நம் சமுதாய பற்று – மனம் நிறைந்து கொள்கிறது! ———————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்