Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

93 ஞானமடா நீயெனக்கு…

1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

86 ஞானமடா நீயெனக்கு…

1 அப்பா சொல்லுடா என்றேன் சொன்னாய், அம்மா சொல்லுடா என்றேன் சொன்னாய், அண்ணா சொல்லுடா என்றேன் சொன்னாய், போடா சொல்லு என்றேன் போடா என்றாய், பொருக்கி சொல் என்றேன் நீயுமென்னைப் பொருக்கி என்றாய்; எதை கற்றுக் கொடுக்கப் பட்டுள்ளதோ அதையே நானும் கற்றிருக்கிறேன் என்பதை எனக்கும் புரியவைத்த – ஞாமடா நீயெனக்கு!! —————————————————————————- 2 சிறகடிக்கும் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய் எனக்குள் ஒரு பூ பூத்து அப்பா எனும் வாசமாய் உடலெங்கும் கமழத் துவங்கியது.. பின் – நீ வளர வளர அந்த அப்பாயெனும் வாசத்தால் நானும் உலகெங்கும் மணம் பரப்பி மதிப்பால் நிரம்பி நின்றேன்; இன்றும் – உன்னிடம் நான் பெற்ற – பெரும் – பாடங்கள் ஏராளம், ஏராளம்; என் குழந்தை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

80 ஞானமடா நீயெனக்கு..

1 உன் வாசனையில் உயிர் சுரக்கும் இன்பம் எனக்கு, எல்லாம் கடந்து விடுகிறாய் நீ உனை விட எந்த வெற்றியோ ஆசையோ – பெரிதாகப் படவேயில்லை எனக்கு, உன் சிரித்த முகம் பார்த்து பார்த்து பூமியெல்லாம் மழை பெய்வதுபோல் ஒரு துள்ளலில் மிதக்கிறேன் நானும், வாழ்வின் – கொடுமைகள் ஆயிரம் இருக்கலாம் வருத்தங்கள் ஆயிரம் இருக்கலாம் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்