Category Archives: நீயே முதலெழுத்து..

30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்!!

ஒரு பானைப் பொங்கலிலே – நூறு பானை சந்தோசம்; பொங்கும் நூறு பானையிலும் – மணக்குதுப் பார் மண்வாசம்! மஞ்சக் கொத்துக் கட்டியதும் சிரிக்குதுப் பார் சூரியனும், வெந்தப் பானைக் குளித்ததுபோல் மினுக்குதுப் பார் வீடுகளும்! குருத்தோலைத் தோரணமும், கரும்பச்சை மாயிலையும் அறுத்தமர வாசலுக்கு அடிப்பச்சை பூசிவிடும், மஞ்சுவிரட்டுக் காளைகளும் – நீளம் சிவப்பு வண்ணஞ்சொலிக்கப் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு காமம் ஆங்காங்கே – முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள் படித்துக் கொண்டிருக்க.. உயிர்வரை சுரக்குமந்த உணர்வில் தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து டையிரியில் குறித்ததை தொடர்ந்து நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின் நினைவாழம் வரை – காதலின் வலி உன்னடையாளமாகவே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

மழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

26) இனியேனும்; எதையேனும் செய்.. (2012)

வா.. சிப்பி திற முத்து எடு உப்புக் குளி முக்கி கடலில் மூழ்கு உலகின் நீளத்தை நீருக்குள் தேடு வானத்தின் உயரம் மிதித்து மிதித்து ஆழத்தை அள அந்திவான பொழுதின் மௌனத்தில் ஞானம் பெருக்கு எங்கெங்கோ தேடி அலையும் பாடத்தை வீட்டில் படி எல்லாம் நடக்கும்; எதையேனும் செய்.. முதிர்கன்னிகள் பாவம் வரதட்சணை யொழி விதவை’ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..

ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்