Category Archives: பறந்துப்போ வெள்ளைப்புறா..

48, பார்க்கையில் சுடும் மரணப் படுக்கையின் விளக்கு..

1 இங்கொன்றும் அங்கொன்றுமாய் இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென நாளுக்குநாள் இறப்பவன் நான்.. எனது இறப்பில் எல்லோருக்கும் பங்குண்டு.. எனது மரணம் எப்போது நிகழ்ந்தாலும் எனது உடலைச் சுற்றி இருப்போர் அத்தனைப் பேரும் – தானுமொரு கொலையாளி என்பதை மறந்துவிடாதீர்கள்.. ஒருவேளை – இந்தச் சமுதாயம் நாளை தனது தவறுகளை விட்டொழிந்து நிற்குமெனில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43) செத்துமடியாதே செய்யத் துணி..

பறவைகள் பறக்கின்றன தூரத்தை உடைக்கின்றன.. பூக்கள் மலர்கின்றன முட்களையும் சகிக்கின்றன.. மரங்கள் துளிர்க்கின்றன மலர்களையே உதிர்க்கின்றன.. மணல்வெளி விரிகிறது மனிதத்தையும் கொடுக்கிறது.. மனிதன் பிறக்கிறான் மாண்டப்பின்பும் தவிக்கிறான் உலகை அழிக்கிறான் ஒரு சாதியில் பிரிக்கிறான் ஐயோ சாமி என்கிறான் சாமியின் சூழ்ச்சுமம் மறக்கிறான் அந்தோ பாவம் என்கிறான் அத்தனைப் பாவமும் அவனே செய்கிறான்.. எல்லாம் நானே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குட்டைக் கால்களின் பனைமரக் கதை..

நான் குட்டையானவன் குட்டையான கால்கள் எனது கால்கள் நடந்து நடந்தே – பாதி குட்டையாகிப் போனேன் நான், அந்தத் தெருவிற்குத் தான் தெரியும் – எனது நடந்துத் தேய்ந்தக் கால்களுக்கும் ஒரு வரலாறு இருக்கிறதென்று; அப்போதெல்லாம் அங்கே பனைமரம் அதிகம் வேலமுள் காடுதான் எங்கும்.. நாங்கள் மாடு ஓட்டி பனைமரப் பக்கம் கட்டிவிட்டு நொங்கறுத்துத் தின்போம் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது!!

அடி வாங்கிக்கொண்டு கற்ற பாடங்களால் அல்ல, பள்ளிவீதியில் நாகப்பழம் அவித்த கிழங்கு வறுத்த வேர்கடலை வெம்பிப்போன காட்டுக் கலாக்காய் விற்ற பாட்டியால்தான் – பள்ளிக்கூடம் இன்றுவரை நினைவில் இருக்கிறது.. —————————————- சந்தேகக் கேசில் பிடித்து உள்ளே போடுமென்றுத் தெரிந்தும் காவல்நிலையத்தை தாண்டிப்போய் இரவு காட்சி பார்க்கவைத்தது அந்தக் கால சினிமாக்கள் மட்டுமல்ல, வயதும் தானென்று இப்போது … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..?”

தேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொக்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்