Tag Archives: அம்மாயெனும் தூரிகையே..

23) என் தாய் வீடு..

ஒரு வீடு ஒரு பெண்ணின் வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. அந்த பெண் தன் குடும்ப மகிழ்வில் ஒளிர்கிறாள். அவள் ஒளியைப் பற்றி மார்தட்டிக் கொள்ளும் நாம் அவளின் கண்ணீரைப் பற்றி அத்தனைக் கவலைப் பட்டதில்லை. இதோ, அப்படி ஒருத்தி தன் இறந்த தாயை எண்ணி அழுகிறாள்.. தலைப்பு: என் தாய் வீடு.. ——————————————— முன்பெல்லாம் எனக்கு அம்மா … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

22) என் பால்ய காலம்…

மண்சோறு தின்ற நாட்களது.. சனி ஞாயிறு கிழமைகளில் விடுமுறையெனில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அத்தனை பயம் வரும்; வீடெல்லாம் விளையாட்டு நிறையும் வாஷிங் பவ்டர் நிர்மா’ விளம்பரம் கூட இனிக்கும் ஒளியும் ஒலியும் மாற்றிவிட்டு வேறு சானலில் – வயலும்வாழ்வும் வைக்க முடியாது அன்று; தொலைகாட்சியை நிறுத்திவிட்டால் திருடன் போலிஸ் விளையாட பிளாட் போடாத இடங்கள் நிறைய … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

19) என் தேசம் தூயதேசம்…

ஒரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேதையான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம்? எனும் கேள்விதாங்கிய கவிதையிது. தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்.. ஆம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

கடல் – பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு கரை வரும் போதெல்லாம் ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன; கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில் ஒருதுளியும் – மர்மமாய் தனக்குள் வைத்துள்ள மரணத்தின் எண்ணிக்கையை யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை கடலுக்கு இருப்பதேயில்லை; தோண்டத் தோண்டக் கிடைக்கும் வரலாறுகளை விழுங்கியதன் தடங்களை மறைத்து அலையலையாய் அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்