Tag Archives: அறம்

உழைப்பின் வழிகாட்டி மணிக்குத் திருமணம்!!

மிலேச்ச நாடுகளுள் கோலோச்சிய நாயகன், சுழல்மாடிப் பள்ளிகளுள் சுடரொளிக்கும் சூரியன்; பகலிரவு பொழுதெங்கும் விழித்திருக்கும் வீரியன், அதர்மமென்று அழைத்தாலோ – நழுவி தர்மத்தில் வீழ்பவன்; கடல்போல் விரிந்த மனதை கேட்காமலே தருபவன், உழைக்கும் பணத்தில் பாதியை உதவிக்கென்றுத் தந்தவன்; இளைஞர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்பவன், இனியோர் விதிசெய்ய இயந்திரவியல் கற்றவன்; பணத்தைச் சம்பாதிப்பதில் பழைய குபேரனுக்கே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..

நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்.. சதை கிழிய தாலி அற உயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த எங்களுறவுகளை கண்ணில் ரத்தம் வடியத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம் உலகின் நியாயம் மறைந்த கண்களில் வார்த்தைகளைத் துளைத்து அழுகையில் தகிக்கும் சொல்லெடுத்து அவர்களின் செவிட்டில் அரையத் தான் எங்களுக்கு இத்தனை நாளாகிப் போனது., காடும் மலையும் மின்னல் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்