Tag Archives: ஆனையிறவு

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ??? கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

14 ஓ………. உலக தமிழினமே..

நிறுத்துங்கள் !!! மௌனமென்னும் மண் பூசி தான் – ஈழத்தில் வந்தேறியின் சுவடுகள் கூட வெற்றிக்கொடியின் சின்னமாயின. ஈழத்தில் தமிழரின் ரத்தம் ஈரமாக மட்டுமே மீதமானது. ஓ………. உலக தமிழினமே மௌனம் களைந்து புறப்படுவோம் வாருங்கள்; போர் வேண்டாம் – ஓர் குரலாவது கொடுப்போம், அதை; எல்லோரும் கொடுப்போம்!! ——————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

13 ஓ………. உலக தமிழினமே..

யாருக்கேனும் எழுதுகோலில் ரத்தம் விட்டு எழுத எண்ணமா? போன வருடம் ஈழத்தில் இழைக்கப் பட்ட கொடுமைகளை சற்று பாருங்கள் – படிப்பவரின் கண்களில் ரத்தமும் சொட்டலாம்! ——————————————–

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

12 ஓ………. உலக தமிழினமே..

பள்ளிக்கூடத்து புத்தகங்கள் நெருப்பில் விழுந்த இதழ்களாகவே பாதி கருகியும் கருகாமலும் ஈழத்து புதை குழிகளில்; வெறும் கணக்கு சொல்கிறார்கள் சண்டாளர்கள் – ‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!! —————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட அரசானையாமே ? எங்கேனும் என் இறந்த மகனின் அல்லது கணவனின் எலும்புத் துண்டு கிடைக்குமாயின் கொடுத்து செல்லுங்கள் – சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால் எடுத்து வீசலாம் – ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது மிட்சப் படட்டும்!! ———————————————-

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்