Tag Archives: எப்படியோ நிகழ்கிறது காதல்..

இருட்டின் சப்தத்தில்; உன் சிரிப்பும்!!

நான் வேண்டாமென்று தான் நினைத்தேன் எனக்கே தெரியாமல் உன் பெயர் உச்சரிக்கப் படுகிறது எனக்குள்; என்ன செய்ய ? இதோ இரவினை வெளுக்க முடியாத ஒரு அவஸ்தையில் – மொட்டைமாடி ஏறி தெருக்கம்பத்து விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்துக் கொண்டேன் வெளிச்சத்தின் வண்ணங்களில் உன் நினைவுகளாக – நிறைகிறாய் நீ.. என்ன செய்ய ? எழுந்து இங்குமங்கும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

38 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன் இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன் முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன் எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன் முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன் எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன் முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன் தரையில் கால்கள் கோலமிடாது விழிகள் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

அவளெனக்கு எழுதிய எந்த கடிதத்திலுமே என்னை காதலிப்பதாக சொல்லவில்லை நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு கடைசி வரை அவள் காதலிப்பதாக சொல்லவேயில்லை நானும் வற்புறுத்தியதில்லை இன்று எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அந்த அவளெழுதிய கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு ஒருவேளை அவளும் என்னை காதலித்திருக்கக் கூடும்!! ———————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22 எப்படியோ நிகழ்கிறது காதல்..

கோவில் திருவிழாவில் எல்லோரும் சாமி வருமென காத்திருக்கிறார்கள்; நானும் சாமியோடு நீ வருவாயென காத்திருக்கிறேன்! —————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்