Tag Archives: காமம்

கட்டிலை உடைத்துவிடேன் காமம்..

விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்!!

ஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

50, தொட்டில் ஆடாத வயிறு..

தாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..

வியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்