Tag Archives: சமூகக் கவிதைகள்

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..

விடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன! நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடைந்த கடவுள் – 20

கனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை!! ——————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 19

மணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்! ———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 18

நகம்கடித்து துப்புவதாகவே எண்ணிக் கொள்கிறார்கள் நிறையபேர் – பிறரின் உணர்வுகளை; உணர்வுகள் கண்ணீராய் ஊறி காய்ந்துவிடுவதாகவே எண்ணம் அவர்களுக்கு. பிறரின் மன வடுக்கள் பிறருக்கு – முழுதாக தெரிவதேயில்லை! —————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக