Tag Archives: சிருங்கவிதைகள்

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம்!! ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர்  பிழைக்கும்!! ——————————————————————– 3 டீ  குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

மரணம் இரைந்த தெருக்கள்..

கைமாற்றி கைமாற்றிக் கொண்டுவந்த அறிவுத் திரள்களின் பிதற்றலில் எப்படியோ கொப்பளிக்கிறது ஞானம்; அல்லது மரணம்! தீக்குச்சி உரசி வீசும் நேரத்திற்குள் அணைந்துவிடுகின்றன உயிர் விளக்குகள்; அல்லது பூத்துவிடுகிறது உயிர்ப் பூ!! காற்றுப் பையின் வெற்று இடத்தில் கண்ணுக்குத் தெரிவதேயில்லை மரணம்; அல்லது பிறப்பின் காரணம்! ஞானத்தை அடையாளம் காட்டாமலேயே மரணம் நிகழும் கடவுளர்கள் வாழும் வீதி; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்