Tag Archives: சிறுபிள்ளை தொழிலாளி

45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!

கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! நாங்கள் பிடித்த மண்வெட்டியும் மண்கூடையும் சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை, சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன; சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த அப்பாவின் சாராயமும் – அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது; பசித்த வயிறும் செருப்பிடா கால்களும் சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது; வீடற்று இருப்பவர்களை பற்றி அந்த அறைகளுக்கு எந்த கவலைகளும் இல்லை, தெருவில் உண்டு உறங்கி புணர்ந்து தலைமுறைகளை கடக்கும் ஒரு சாமானியனின் தேவை நான்கு சுவர் மட்டுமே என அந்த – வெற்றுக் கட்டிடமான கல் மண் கலவைகளுக்குப் புரிவதேயில்லை! ————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 32

எனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்! ————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்