Tag Archives: தேசத் தலைவர்

கண்ணீர் வற்றாத காயங்கள்..

1 ரத்தம் பிசுபிசுத்த நினைவுகளை சுயநலத்தினால் – கழுவிக் கொண்டாலும் கறைபடிந்த உணர்வோடு திரியும் இதயத்தில் – இன்னும் ஒட்டிக் கொண்டுள்ளது அந்த ஈழத்திற்கான ஒருதுளி நம்பிக்கை!! ———————————————– 2 ஈழம் வெல்லும் வெல்லுமென்று முழங்கியேனும் கொண்டிருப்போம்; உள்ளே உறங்கிப் போகும் உணர்வுகள் அம்மண்ணில் உறைந்த ரத்தத்தை நினைத்தேனும் ஈரமொடிருக்கட்டும். நெஞ்சின் ஈரம் – நாளை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!

  தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி  சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)

தக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து  உலகெங்கிலும்  தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து;  என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக  அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை  தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும்  … Continue reading

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்