Tag Archives: பரதேசி

பரதேசி எனும் பெயரில்; நம் மக்களின் வாழ்ந்து தீராக் கதையது.. (திரை விமர்சனம்)

மனசெல்லாம் விக்கி விக்கி அழுகிறது. கண்ணில் ஊறும் ரத்தமின்னும் உயிர்போகும் வரை வெளியே கொட்டிவரட்டுமே என மனசு பிராண்டி பிராண்டிக் கத்துகிறது. உடம்பின் ஒவ்வொரு துளியிலிருந்தும் என் இனத்திற்காக ஒரு துளி கண்ணீர் சொட்டிச் சொட்டி உயிர் தீருமொரு வலி வலிக்கிறது. எத்தனை உயிரை குடித்த மண் எனது மண்(?) எத்தனை பரம்பரையை தொலைத்த மண் … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

முற்றுப்புள்ளி!!

வாழ்க்கை தீரா வெள்ளைப் புடவைக்கு நெற்றியில் ஒரு புள்ளி வேண்டும், குற்றம் இதென்று உணராது நீளும் காதல்கொலைக்கு நிச்சயம் மறுபுள்ளி வேண்டும், வட்டிக் கடனோடு ஓயாத துயருக்கு வரும்புள்ளி மரணமென்றாலும் வேண்டும், குட்டிச்சுவர் மீது உடைகின்ற புட்டிகளில் தேசம் தொலையாத புள்ளியது வேண்டும், வாழ்க்கை வரமாக அமைகின்ற பாடத்தின் அறிவை விற்காத சமப் புள்ளி வேண்டும், … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..

கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா? பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்