Tag Archives: பொங்கல் கவிதை

ஆசைன்னா ஆசை; அப்படியொரு ஆசை..

ஆசை நிரந்தரமானவை அழிவதில்லை; வாழ்வின் மேடு பள்ளங்களில் ஏறியிறங்கியும் அதற்கான இடத்தை அதுவாகவே தேடிக்கொண்டுமிருக்கிறது ஆசை; சிகரெட் சுடும் உதட்டிலும் மது குடிக்கும் போதையிலும் மலிவாக மணக்கும் வியர்வையிலும் அற்பமாக நிலைக்கிறது ஆசை; கடன்வட்டி கனத்தில் ஏதோ நடந்திராத ஏக்கத்தின் வலியில் திறந்தக் கதவின் திருட்டில் மூடியக் கதவின் இருட்டுள் முள்போல குத்துகிறது ஆசை; பெண்ணின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இனிக்கும் கரும்பும்; கண்ணீர் கரிக்கும் பொங்கலும்!!

ஒவ்வொரு விறகாய் சுள்ளி பொருக்கி ஓராயிரம் கனவை சமைத்து ஓயாக்  கண்ணீரிலும் உள்ளம் சிரிக்கும் பொங்கல்; ஒரு துண்டு கரும்பு நறுக்கி  – வீடெங்கும் எறும்பூர ஒரு பானை வெண்சோற்றில் வீடெல்லாம் இனிக்கும் பொங்கல்! உழுத நிலம் பெருமை கொள்ள உழைத்த மாடு மஞ்சள்  பூட்டி ஊரெல்லாமெம் வீரத்தை ஆண்டாண்டாய் விதைத்தப் பொங்கல்; மீண்டும் மீண்டும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வெள்ளைப் பொங்கலும் வாழ்வின் சந்தோச நாட்களும்..

வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும் வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும் மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும் சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்; பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத் திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு; மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம் குங்குமம் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்..

மரம் நெடுக வீசும் காற்றும் காற்றெல்லாம் கலந்த மணமும் மனமெல்லாம் நிறைந்த மகிழ்வும் மகிழ்வில் பொங்கி நிறையும் தமிழர் பண்பும் நன்றியும் மானுட வளர்ச்சியும் உலகின் வேர்களில் ஊறி செழுத்திட பொங்கட்டும் பொங்கட்டும்; பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்! என் அன்புள்ளங்களுக்கு இனிய வணக்கமும் வாழ்த்துக்களும் நிறையட்டும்! போ(க்)கியும் பொங்கலும் அதன் சிறப்புக்களும்.. ஆண்டாண்டு காலமாக ஆண்ட … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்