Tag Archives: மழைநீர்

35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1 மரம் விரிச்சோடிக் கிடந்தது காற்றேயில்லை கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம் எரித்திருத்தோம்! —————————————————————————– 2 மரம் வெட்டி மரம் வெட்டி மரவெட்டியானான் மனிதன்; மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!! —————————————————————————– 3 மின்னல் விழுந்து பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம் இப்போது நடப்பதில்லை; பனைமரம் வெட்டப்பட்டபோதே மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்! —————————————————————————– 4 ஒரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மழை; மழையதை வேண்டு..

மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

மழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..

ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!!

இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்