Tag Archives: முள்ளிவாய்க்கால்

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ??? கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை  முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக