Tag Archives: யாதார்த்தக் கவிதைகள்

எனது தெய்வத்தின் சிரிப்பு..

எனக்கு அப்பாயில்லை.. எல்லோரையும் போல நான் அப்பாவின் தோளில் அடிக்கடி சாய்ந்துக்கொண்டதில்லை.. சாப்பிடும்போது ஒரு உருண்டை சோறூட்டவோ சாய்ந்தத் தோளில் ஏறி விளையாடவோ நான் அப்பாவை தேடவில்லை; மனசு வலிக்கையில் அப்பாவையுமெண்ணித்தான் நோகிறது மனசு.. அப்பா பாசத்தில் வாசம் மிக்கவர் பார்க்க அழகும் பறிக்க எளிதாகவும் கிடைப்பவர் அதனால்தானோ என்னவோ – சொற்பத்தில் வாடியும் போனார்.. … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

27) மழை பெய்த ஓரிரவின் விடிகாலையும்; விமான ஜன்னலோரமும்!!

மழை விட்டொழிந்து இலையில் நீர் சொட்டுமொரு காலை.. வானொலியின் சப்தத்தில் மழையிடித்த வீடுகளின் விவரமறியும் தலைப்புச் செய்திக்கானப் பரபரப்பு… சரிந்த கூரைப் பிரித்து மூங்கில் நகற்றி – உள்ளே அகப்பட்டுக் கிடக்கும் ஆடுகளை விடுவித்து தழையொடித்துப் போட்ட ஆடுகளின் பசிநேரம்.. மழை நனைத்த ஆட்டுப்புழுக்கைகளின் மரங்களோடு கலந்த மண்வாசம்.. அதைக் கழுவி விடுகையில் பாட்டி திட்டிக் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

25) கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளை கனவுகள்..

ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!!

இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

21) வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்!!

கொஞ்சம் தூக்கமும் கொஞ்சம் கவலையும் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும் கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும் மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம்! பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்! பட்ட வலியும் கண்படாத இடமும் கதறிய சப்தமும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்