Tag Archives: வாகனம்

137 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

அதிவேக சாலையில் திடீரென – குறுக்கே வந்த வாகனம் கண்டு தற்காலிகமாக அழுத்திய வேகத்தடையில் – வண்டி நின்றுவிட்டாலும், இதயம் – சுக்குநூறாக உடைந்து படபடக்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

136 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

மிதிவண்டியில் பயணிக்கையில் – மோட்டார் பைக் பெரிதாக தெரிந்தது; மோட்டார்பைக் வாங்கிய போது மகிழுந்து பெரிதாக தெரிந்தது; மகிழுந்து ஓட்டுகையில் பேருந்தோ லாரியோ பெரிதாக தெரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

135 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருவோரத்தில் வாகனங்கள் வரிசையாய் நிற்கிறது; எத்தனையோ பேரின் அவசரம் தெரிந்தோ; தெரியாமலோ;

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

134 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலையின் ஓரத்தில் – எழுதிவைக்கப் பட்டுள்ள வாகனக் கட்டுப் பாட்டுத் துறையின் அறிவிப்பு எல்லோரின் வேகத்தையும் கட்டுப் படுத்தி விடவில்லை; நிறைய – விபத்துகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

133 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

உள்ளூர் நெரிசல்களை தாண்டி நெடுஞ்சாலைகளில் அதிவேகமாய் பயணிக்கும் வாகனங்களுக்கிடையே அறியாமல் ஓடிவரும் சிறுவனை எந்த பிரேக்கும் சாமியும் – காப்பாற்றிவிடுவதில்லை; இரத்தம் மட்டும் – காண்பவரின் இதயத்தை நனைத்துவிட்டு வாகனங்களின் வேகத்தில் காய்ந்தேவிடுகிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக