Tag Archives: விடுதலை

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

நட்புறவுகளுக்கு வணக்கம், இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.. … Continue reading

Posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)

சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகரின் புதிய பாடல்..

உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்றும் சாகாத பிறப்பின் விடியல்..

கண்ணில் விழும் தூசிபோலல்ல கண்ணில் குத்தும் ஈட்டியைப் போல் நெஞ்சில் வந்து தைக்கிறது நமக்கான அநீதிகள்; அயலான் சுட்டு சுட்டுத் தள்ளியும் திருப்பியடிக்க இயலாத என் கையில்தான் எழுதப்பட்டுள்ளது எனது தேசத்தின் பெயரும்.. கையை வெட்டியெறிவதை ஏற்காது உயிரை விட்டுத் தொலைக்கும் உறவுகள் தீக்குகிரையாகும் வேதனை வீதியெங்கும் மரம்போலானது.. வீட்டை எரிக்க இயலா வன்மத்தில் பாரபட்ச … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்