Tag Archives: வித்யா

குங்குமம் வாரஇதழில் நம் கவிதை..

அப்பாவை அப்பாவாகப் பெற்றப் பிள்ளைகளுக்கு இந்தக் கவிதை அர்த்தம் சேர்க்கும்.. பிரசுரித்த குங்குமம் இதழை நன்றியோடு நினைத்துக் கொண்டு உங்களிடம் பகிர்கிறேன்.. கவிதையைப் படிக்க இங்கேச் சொடுக்கவும்.. பெருநன்றியும் வணக்கமும்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)

உன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்…? காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்)

கடலெல்லாம் நீரள்ளி கரையெல்லாம் மணற்பொருக்கி கிளிஞ்சல்களின் சப்தத்தில் காதுபுதைத்து பொழுதெல்லாம் உறங்கியும் தீராத வாழ்க்கையில் ஒட்டியிருக்கும் சொச்ச வாழ்க்கை எப்படிக் கடலைப் பற்றி மட்டுமே பேசுமோ அப்படி மனசு அந்த படத்தைப் பற்றியேப் பேசிக்கொண்டுள்ளது. கடற்கரையில் ஒதுங்கிநின்று அவளின் காதலனை எண்ணி எண்ணி கண்ணீராய் விடுமந்த அழுகைமாறாத மனசை என்ன செய்ய ? வேண்டுமெனில் இன்னொரு … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்! புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!! … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்