Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ என அடிப்பது போல் பாவனை செய்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 3 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 8

கையசைத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறாய், எனக்கென்னவோ நான் தான் உனை விட்டுப் பிரிவது போல் வலி, நீ – குதூகலத்தோடு ஓடிவந்து – எனக்கொரு முத்தமிட்டு விட்டு புதியதாய் ஒரு சுதந்திரம் கிடைத்தாற்போல் ஓடுகிறாய்; எது உனக்கு சந்தோஷம்? எனைவிட்டுப் பிரிந்திருப்பதா இல்லை, யாருமே உனை கண்டித்திராத ஒரு உலகமா???!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 7

இங்கே வா இதை எடுக்காதே அதை செய்யாதே அங்கே போகாதே அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம் மிரட்டுகையில், உனக்கு என் மீது கோபம் வரும்போல்; கண்களை கசக்கி நீ என்னையே பார்ப்பாய். நீ மீண்டும் அங்கே போய் அதை எடுத்து எதையேனும் செய்து எங்கேனும் போய் எனை ஏமாற்றிவிட்டதாய் துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய் நான் மீண்டும் … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 6

ஓரிரு பருக்கைகள் தான் கீழே விழுகின்றன நீ எடுத்து வாயில் வைக்கையில் மிரட்டி – நீ கீழே போட்டதும் எடுத்து எங்கோ வீசுவேன். நீ நானென்னவோ நீ தின்பதை பறித்துக் கொண்டதாய் பார்ப்பாய். வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும் உனக்கான ஒரு தட்டு சோறு நான் தின்னாத மிச்சமென உனக்கு தெரியவா போகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 5

உன் பிஞ்சு விரல்கள் பதிய எனை – கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்; எடுத்துவிட்டால் எழுந்துவிடுவாயென எடுக்கவுமில்லை உறங்கவுமில்லை நீ தூங்கும்வரை விழித்திருக்கிறேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக