Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!! ஓடி மறைந்து வாழ்ந்தது போதும் ஊர் மறந்து உறங்கியது போதும் உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும் பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும் எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்; வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்; இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்! விடுதலை விடுதலை யென்றே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

40) ஈழத்து படுகொலையும் மீனவ ரத்தம் பாயும் கடலும்!!

  தனக்கொன்றும் தெரியாதென தலைதிரும்பி இருந்த ஒட்டுமொத்த தமிழகத்தையும் – ஈழத்து இழப்பின் பக்கம் திருப்பி என் உறவுகள் மடிந்து கொண்டிருந்த பேரழிவை உணர்த்த தன் உயிரையும் துச்சமென ஈந்த தியாகி  சகோதரர் திரு. முத்துகுமார் அவர்களை நினைவு கொள்வதில் – பெருமை கொள்வதோடு அல்லாமல் – அவருடைய இனத்தின் மீதான இந்த அக்கறை, மொழியின் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின் வருத்தம் புரியா உலகமிது; நின்று யோசித்து நிமிர்கையில் – காலம் அதோ எங்கோ போகிறதே….!! சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா? சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம் பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ? சொல்லி அடித்த பரம்பரைதான் புது ரத்தம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்