வித்யாசாகர் பேசுகிறேன்

அன்பிற்கினிய தோழமைக்கு வணக்கம்!

ங்களின் கடைவிழி பார்வையின் விளிம்பில் நின்று
கர்ஜிக்கிறதே என் எழுதுகோல்; கேட்கிறதா தோழர்களே???

ணினியின் ஜால வித்தைகளுக்கு நடுவே வாழும் மனிதர்களுக்கு நாவல் குறுநாவலாகி, குறுநாவல் சிறுகதையாகி, சிறுகதை நிமிடக் கதையாகி; நிமிடமும், அரை, காலென்றாகி விட்ட காலத்திலும், ஒரு சாதாரண இளைஞனாய்; எதையேனும் சாதித்துவிட இரவும் பகலும் எழுத்துக்களிடையே உறங்கி எழுத்துக்களிடையே விழிக்கிறேன்!

ள்ளிரவில் தூங்கி; நள்ளிரவில் எழுந்து;
முழு இரவையும் தொலைத்து – வாங்கிய எழுத்துக்களில் –
ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும்; வெற்றி என்பேன் தோழர்களே!

வானத்தின் கைக்கெட்டிடாத தொலைவில் பூத்து
வானத்தை அன்னாந்திருக்கும் ஒரு காட்டுப் பூவினை போல்
எங்கோ ஏதோ ஒரு மூலையில் – உங்களின் அங்கிகாரம் நோக்கி
நானும் எனை போன்றோரும் காத்துத் தான் கிடக்கிறோம்!

ருந்தும், எத்தனையோ காலவிரயங்களை கடந்தும்
நீங்கள் சொல்லும் ஒரு ஆஹா..வில் தான் எங்களின் எழுத்துக்கள் கவிதையாகிறது; நீங்கள் தட்டும் ஒரு கைதட்டலில் தான் சாமானியன் கவிஞனாகிறான்; நீங்கள் கொடுக்கும் அங்கீகாரத்தில் தான் உலகம் எங்களை திரும்பிப் பார்க்கவே செய்கிறது.

எனவே, என் கோரிக்கை உலகத்தை நோக்கியல்ல என் உறவுகளே; உங்களை நோக்கி.

கொட்டும் முரசு கொட்டட்டும்;
பெய்யும் வானம் பெய்யட்டும்;
பூக்கும் மலர்கள் பூக்கட்டும்;
சிரிக்கும் உதட்டோர ஏளனம் கடந்து –
அழும் விழியோர ஈரம் கடந்து –
விடியும் ஏதேனும் ஒரு காலை பொழுது
எனை போன்றோருக்காகவும் விடியட்டும் உறவுகளே!!

வேறொன்றும் வேண்டாம், படியுங்கள். படித்துவிட்டு எழுதுங்கள். காத்திருக்கிறேன்.
—————————————————————————————————–
வித்யாசாகர்

152 Responses to வித்யாசாகர் பேசுகிறேன்

 1. Mano சொல்கிறார்:

  Very fantastic site

 2. siva சொல்கிறார்:

  nalla arumayaana kavithaikal

 3. Dhivya சொல்கிறார்:

  This really very good site for poems

  DHIVYA

 4. பிரகாஸ் சொல்கிறார்:

  கவிதைகளின் தொழிற்ச்சாலை
  தொடரட்டும் உற்பத்திகள்

  சகோ

 5. selva சொல்கிறார்:

  வித்யா தங்கள் கவிதை பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 6. Kirupairajah சொல்கிறார்:

  வித்தியாசாகர் தங்கள் கவிதை பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நல்ல கருத்துக்களாகவும் தமிழரை சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் கவிதை, பாராட்டுக்கள்!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   எழுத்தின் வீச்சில் ஒருவர் திரும்பிப் பார்த்தாலும் சிரித்து மகிழ்வேன்; ஒருவர் போற்றினாலும் எழுதத் துணிவேன்; ஒருவர் கொள்ளும் மற்றம் உலகிற்கு நல்ல உயர்வை கொடுக்குமெனில் அன்றே என் எழுத்தை எழுத்தென்பேன்!

   அன்பு கிருபைக்கு மிக்க நன்றிகள் பல…

 7. aarul சொல்கிறார்:

  கவிதை கள் அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

 8. amuthan சொல்கிறார்:

  தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நாங்கள் காத்திருக்கிறோம்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   காலம் என் உயிர் சுமக்கும் வரை கண்ணும் எழுதக் கையும் உள்ளவரை நிச்சையம் எழுதிக் கொண்டே இருக்கிறேன் அமுதன். அதற்கு பலமாய் துணையாய் உங்களை போன்றோரின் பின்னூட்டமும் இருப்பதையே கடவுளின் அருளென்றும்; இயற்கை எனக்களித்த கொடையென்றும் நம்புகிறேன் அமுதன்!

 9. Ponnakk Marutha சொல்கிறார்:

  உங்களின் சில ஹைக்கூ கவிதை….எழுது கோலை பிடுங்கி கொள்வதாய்…….நிறைய பறவைகள்………..
  என்னைப்ப‌ற்றியும் எழுது என்கிற‌தோ,

  பாட‌ம் கேள் என்கின்ற‌ன‌வா….ம‌ண்ச‌ட்டி வாச‌னை…இன்ற‌ய‌ க‌லாச்சார‌ சூழ்நிலை ந‌ம‌து பார‌ம்ப‌ரிய‌த்தை பொசிக்கிவிட்ட‌தோ…என்ற அர்த்த‌தில் சொல்வ‌தாக‌ ப‌டுகிற‌து,

  உங்க‌ள் த‌மிழ் விய‌ப்பாக‌ இருக்கிற‌து…பின் ஊட்ட‌த்திற்க்கு நீங்க‌ள் கொடுத்திருக்கும் விள‌க்க‌ங்க‌ள்…அழ‌கான‌ த‌மிழ்…இன்ர‌ட‌க்ஷ‌ன்..அருமை..அட‌க்க‌ம் தெரிகிர‌து,

  மாடிவீட்டிலிருந்து எச்சி உமிழ்கிறார்க‌ல்…உங்க‌ளின் ச‌முக‌ நோக்க‌ம் வெளிப்ப‌டுகிற‌து…ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌முக‌த்தின் அவ‌ல‌ நிலை புரிந்த‌தாக‌ தோணுகிற்து,

  உங்க‌ளின் தோற்ற‌ம்…க‌ம்பீர‌ம்…(high-fy)வேறுமாதிரி தோன்றினாலும்..நம்மை எட்ட நிறுத்துனாலும்,உங்க‌ளின் எழுத்து அருகாமையில் இருப்ப‌தாக‌ ஒரு உண‌ர்வை கொடுக்கிற‌து,

  மொத்த‌த்தில் உங்க‌ளிட‌ம் த‌மிழ் ப‌ற்றும், ந‌ல்ல‌ எழுத்து சுர‌ங்க‌மும் இருக்கிற‌து…வாழ்த்துக‌ள்!!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்புடையீருக்கு வணக்கம்,

   தோற்றம் இயற்கையாயிற்றே தோழமையே என் செய்வேன். வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்திலும் உங்களை போன்றோரின் அன்பிலும் ஓடும் ஓட்டமே என் எழுத்தென்று உணர்கிறேன். நான் சென்ற பாதை என்னை நலமாகவே வைத்துள்ளது. அது பிறருக்கும் பயன் தருமோ என்ற எதிர்ப்பார்ப்பே எழுதுவதின் நோக்கம். அதன் அர்த்தம் புரியுமெனில் மிக்க நன்றி கூறவும்; எனை எழுத்தினால் இத்தனை தாங்கி எழுதியமைக்காய் பெருமகிழ்வு கொள்ளவும் கடமையானேன் தோழமையே.

   மிக்க நன்றிகளுடன்..

   வித்யாசாகர்

 10. பிரகாஸ் சொல்கிறார்:

  சகோ

  தங்கள் எழுத்தின் தமிழின் அழகு,
  ஆழம், இனிமை எல்லாம் உள்ளடக்கமாக இருப்பது
  தெளிவாகி இருக்கிறது தமிழ் சொற்களின் பல அர்த்தம்
  உள்ளதை விளக்குகிறீர்கள் அழிந்து வரும் தமிழ் சொற்களின்
  பயன் பாட்டை தொடருங்கள்

  அன்பின் சகோ

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கம் சகோ.

   புகழுக்காக ஏற்க மறுத்தாலும் தங்களின் அன்பின் அடி நாதத்திளிருந்து பேசும் குரல் உங்களுடைய குரல் என்பதால், மெச்சிதலை தவிர்த்து; எதையோ சரியாக செய்வதாய் சிறு ஆறுதலை பெற்றுக் கொள்ள முனைகிறேன்!

   மீண்டும் மீண்டுமான என் முயற்சிகளுக்காய் பெருத்த பலம் பெற்றுக் கொள்கிறேன்!

 11. Pingback: ஹைக்கூக்கள் – வித்யாசாகர் « Rammalar’s Weblog

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக அழகாகப் பதிந்துள்ளீர்கள். தன் படைப்புகளை தலைமேல் சுமப்போருக்கு மத்தியில் நன்மையை எங்கு கண்டாலும் போற்றுவோமென தாங்கள் செய்யும் இப்பெரும் பணி பாராட்டத் தக்கதும் எனது நன்றிக்கும் உரியதாகும்.

   வாழ்க; வளர்க!

 12. j.edwin raja சொல்கிறார்:

  ungal kavithikal super. innum niraya kavithikalai ethirparkkiren. thamil valga

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி எட்வின் ராஜா. உங்களைப் போன்றோரின் ஆர்வத்தில், பற்றில்; தமிழ் ஜோதியென பற்றி எரியும். நமக்கான வெளிச்சத்தை நமக்கே தரும் தமிழ்.

   உங்களின் தமிழ் பற்றினிற்கு, தமிழ் வாழ்கவென இட்ட கோசத்திற்கு தலை வணங்குகிறேன்!

 13. விஜய் சொல்கிறார்:

  //நள்ளிரவில் தூங்கி; நள்ளிரவில் எழுந்து;
  முழு இரவையும் தொலைத்து – வாங்கிய எழுத்துக்களில் –
  ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும்; வெற்றி என்பேன் தோழர்களே//

  I feel lot to share…

  அந்த விழித்துகொண்ட எத்தனையோ இதயத்தோடு ஒன்றாக இன் இதயமும்..

 14. Bala. R சொல்கிறார்:

  really very super to see in website about your Kavithai, go ahead further too………..ithu thamizhanin ennam,

  vazhga umathu padaippu..
  valarga namathu thamizh..
  ithuve umathu sirappu!

  anbudan

  Bala. R

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மனதில் பூக்கும் தமிழுக்கான கனவுகள் எல்லோருக்குள்ளும் ஏராளம். அதில் ஒற்றை கனவு, ஒருவனின் சுவாசம் – கவிதையெனில்; அதை எனதாய் கொள்க.

   தமிழராகிய நாம்; நம் அடையாளம் தொலைக்காது, முறையாய் வாழ முற்பட்டால்; தமிழ் தானே வாழும்!

   வாழ்த்திற்கு நன்றி பாலா!

 15. kanchana சொல்கிறார்:

  its really very nice

 16. kanchana சொல்கிறார்:

  Dear Sir,

  Thanks for your prompt reply . your books all are really super.

 17. roselin சொல்கிறார்:

  hai anna
  simply super. tamil kavithai super

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கமென் அன்பிற்குறிய தங்கையே,

   மிக்க நன்றிமா உங்களின் அன்பான வார்த்தைகள் மனதை உள்வரை அன்பினாலே தொட்டது. தொடர்ந்து படித்து பிற கவிதைகளும் படைப்புகளும் எப்படி உள்ளதென சொல்லுங்கள். படிப்பது மிக நல்ல பழக்கம். அதிலும் நல்லதை படித்து எடுத்து நடப்பதும், தீயதை படிக்க நேரின் எச்சரிக்கை உணர்வை அடைவதும் சிறப்பு.

   நூறு பூக்களை கொடுத்து ஒன்றினை எடுத்துக் கொள்ளச் சொன்னாள் எப்படித் தேடி உங்களுக்கான, உங்கள் மனதிற்குப் பிடித்த ஒரு மலரினை எடுத்துக் கொள்வீர்களோ; அப்படி உங்கள் வாழ்வின் இனிமைக்கானதை தேடி படித்து எடுத்து; நலம் வாழுங்கள்.

   அன்புடன் அண்ணா..

 18. kochai thamizhan சொல்கிறார்:

  வணக்கம்,

  பார்த்தேன், படித்தேன், நீ தென். நான் வண்டு. உனில் உள்ள தேனை பருக பறக்கும் வண்டுகளில் நானும் இன்றுமுதல் இருப்பேன்! நீங்கள் ஒரு வித்தியாசமான சாகர் என்பதில் ஐயம் இல்லை. பொதுவாக சாகர்களில் தண்ணீர் தான் நிரம்பி வழியும் ஆனால் உங்களில் தமிழ் கவி நீருற்று நிரம்பி வழிகிறது!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அப்பப்பா…, இனித்தேன்.. மகிழ்ந்தேன்.. உங்களின் அன்பான விமர்சனத்தில் உள்ளம் நிறைந்து திளைத்தேன். மிக்க நன்றி விஷால். தொடர்ந்து வாருங்கள்.. தேனூருங்கள்.. வாழ்வின் கசப்பும் கொபமுமுடனான நம் பயணத்தில் தங்களை போன்றோரின் அன்பு இனிக்கவும் செய்யட்டும்.

   வாழ்க!

 19. kartikainathan சொல்கிறார்:

  kavignarey!
  innovative thinking reflects in your poems. simplified words touch the mind. continue! let the tamil poetical world flourish and become more fertile by you too.

  கவிஞரே!

  உங்கள் கவிதைகளில் புதுமை பிரதிபலிக்கிறது. எளிய வார்த்தைகள் இலகுவாய் புத்தியை தொடுகிறது. தொடருங்கள். தமிழ் கவிதை உலகம் இன்னும் சிறந்த இனிய படைப்புகள் பலதை பெற்று உங்களாலும் சிறப்படையட்டும்.

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   உலகை எட்டித் தொடும் வெற்றியொன்று உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது தோழரே. உங்களின் மேன்மையான வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மனமுவந்த நன்றிகள் பல. இயன்றதை செய்வோம் பலனை நீங்களாகிய சமூகமே தீர்மானிக்கட்டும். தவறுகள் தன்னை திருத்திக் கொள்வதற்கும், நன்மைகள் இறைவனுக்கே சமர்ப்பணமும் ஆகட்டும்.

   பெருமகிழ்வுடன்.. நன்றிகளும் உரித்தாகட்டும்!

 20. வணக்கம் தோழர் உங்க படைப்புக்கள் அழகு ,அருமை, தொடருங்கள் உங்கள எழுத்துப்பணியை வாசிக்க காத்து இருக்கிறேன்..

  அன்புடன் மன்னை முத்துக்குமார்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு வணக்கம்,

   மிக்க நன்றி தோழர், மனதார பாராட்டுகிறீர்களே. விசால மனம் கொண்டுள்ளீர்கள் போல். தங்களின் தளமும் கண்டேன். தங்களின் மனம் போலவே காண வேண்டியதாக அமைந்துள்ளது. எழுத்துப் போராட்டத்தில் வெல்லாத மகுடங்களை துச்சப் படுத்திவிடுகிறது உங்களை போன்றோரின் அன்பும் பெருமிதமும், மிக்க நன்றி தோழர். தொடர்வோம்…

 21. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை நண்பரே..அசத்துங்க..

 22. kanchana சொல்கிறார்:

  Dear Brother,

  Wish you MAY Day wish

  simply super

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கம்மா..,

   தங்களின் அன்பில் அண்ணனாக மனம் மகிழ்ந்தேன். பழகினால் நட்பு; உற்றால் தான் உறவேன்றில்லை, உண்மையான அன்பிற்கு மனது போதும். மனது உணர்தல் போதும். உணர்ந்தேன். உழைப்பாளார் தினத்திற்கான வாழ்த்தை உங்களின் கண் கொண்டு நானும் உலகத்திற்கு தெரிவிக்கிறேன்மா.

   முந்தைய வலையின் தோற்றம் உங்களுக்குப் பிடித்தது போல் உணர்கிறேன், சற்று கவனக் குறைவால் அது குளறுபடியானது, மீட்டுவர முயன்று கொண்டிருக்கிறேன். தற்போது வலையின் தோற்றம் சரியா??? போதுமானதா??? அல்லது முந்தைக்கே மாற்றி விடுவோமா???

   பிற அன்புள்ளங்களும் சொல்லலாம்..

   தங்கைக்கு மனது நிறைந்த வாழ்த்துக்களும்.. நன்றியும்.. உரித்தாகட்டும்!

 23. Ratha சொல்கிறார்:

  கவிதைகள் நன்று. காயமுற்ற நெஞ்சங்களுக்கு ஆறுதலாகட்டும்.
  ஈழத்திலிருந்து உங்கள் வாசகி.
  -ராதா

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஆடம்பரமில்லா வார்த்தைகளில் மனதை மட்டும் வெளிப்படுத்தியுள்ள அன்பு ராதா அவர்களுக்கு மிக்க நன்றி. எடுத்து ஒன்றும் செய்திட இயலாவிட்டாலும் மருந்தாவது போடும் முயற்சி தான் சகோதரி என் பயணத்தின் லட்சியம். உண்மையில் காயமுற்றவர்களுக்கு என் எழுத்து ஆறுதல் அளிக்குமென்ற ஒற்றரை வார்த்தை எனக்கும் ஆறுதலான வார்த்தை தான்.

   இன்னும் நீளுமென் பயணத்தின் முடிவில் நிறைய இதயங்கள் நிறைவு கொள்ளுமென நம்புவோம்! தொடர்ந்து வாருங்கள்.., அன்பினால் அருகாமை கொள்ளுங்கள்!!

 24. கமல் சொல்கிறார்:

  அருமையான அறிமுகம்! தொடர்ந்தும் வீறு நடை போடட்டும் தங்களின் எழுத்துப் பணி!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி கமல். எப்படியேனும் ஒரு வகையில் தன்னை முன்னிலை படுத்திக் கொள்ள, எந்த கொள்கையுமில்லாத மானுடம் பிறர் உடம்பை எடுத்துக் காட்டியும், எழுதியும் கூட, வென்றுக் கொண்டிருக்கையில், நாமெல்லாம் எங்கோ பின்னுக்குத் தள்ளப் பட்டே விடுகிறோம், பின்னாலிருப்பதை பற்றி கவலை இல்லை கமல் உங்களை போன்றோரின் வாசிப்பிற்காய் எனக்கான எழுத்துப் பயணம் என் இருப்பு வரை நீளும், மேலுமதை வெற்றியா தோல்வியா என்பதை எனக்குப் பின் வருவோர் வேண்டுமனில் தீர்மானித்துக் கொள்வர் போல்!!

 25. malathi சொல்கிறார்:

  Today i saw your site its so amazing no words to describe…..

  i want to know how you update the poem, daily or monthly once

  Keep rock!!!!

  இன்று தங்களின் தளம் பார்த்தேன். மிக மிக அருமை. விவரிக்க வார்த்தைகளே இல்லை..

  கவிதைகளை எவ்வாறு பதிகிறீர்கள், நாள்தோறுமா மாதத்திலொரு முறையா என்று தெருவியுங்கள்.

  சிறந்து செயல் படுங்கள். (கலக்குங்க!!!)

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி.. மாலதி,

   மிக ஆழ்ந்த வாசிப்பின் நல்ல விமர்சனம். தினம் பதிவதிலேயே முழுமை அடைய வில்லையென் எழுத்தின் தாகம், எங்கே மாதம் வரை காத்திருபப்து மாலதி.

   நான் எழுதாத நாள்; வாழாத நாளென்று கருதுகிறேன். எனவே தினமும் எதையேனும் என் சமூகத்திற்காய் பதிவதே என் முயற்சிகளும், முழு எண்ணமுமாகக் கடக்கிறது நாட்கள். தொடர்ந்து வாருங்கள். பேசுங்கள். மவுனத்தில்; காலத்திற்கான பதிப்புகளை தொலைத்து விடாதீர்கள். மனம் விட்டு, பேசிக்கடந்த நொடிப் பொழுதையும் ‘வரலாறாய் பதிந்து, நாளைய தலைமுறைக்கு நம் எண்ணங்களையும் விட்டுச் செல்வோம்!

 26. Babu சொல்கிறார்:

  உமது வலையில் நுழைந்தேன் ! பார்வைகளோ பனிரெண்டாயிர்த்தை கடந்துள்ளது, என் பார்வை இன்றுதான் பட்டுள்ளது ! உமது படைப்புகளின் வார்த்தைஜாலங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன ! வாழ்க உமது படைப்புகள் !
  வளர்க உமது கற்பனைகள் ! வெல்லுங்கள் மனித உள்ளங்களை !
  ஜெஇஹிந்த்!

  என்றும் அன்புடன்
  பாபு

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு கூர்ந்த எண்ணமிகுதியில் உரிமை கொண்ட வாழ்த்துகள். பலம் கூட்டும் விமர்சனத்தின் கர்வம் ஏற்றும் புகழாரம். புகழாக இல்லாமல்; மேலும் கவனம் கொள்ள எண்ணுகிறேன். நல்ல படைப்புகளை தர முயற்சிக்கிறேன் பாபு. மிக்க நன்றி!

 27. R.Vithyasagar சொல்கிறார்:

  Dear sir,

  I am Vithyasagar.R ungaludaya kavithaigal enakku romba piduchuthu ungaludaya padappugalil enakku silavatrai enakku mail mulam anuppavum.

  by ungal anbudan
  R.Vithyasagar
  Coimbatore
  Tamilnadu

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி வித்யா..

   வாழிய நலம். கவிதைகளை அனுப்பித் தரக் கேட்டீர்கள். வைத்து படிக்க எனில் சென்னை மணிமேகலை, லியோ மற்றும் தமிழ் அலை மற்றும் முகில் பிரசுரங்களில் நம் படைப்புகள் கிடைக்கும். அல்லாது இணையத்தில் படிக்க எனில் நம் தளத்திலிருந்தும், வேறு சில ஈகரை, மீனகம், வித்யாசாகர்.காம் (www.vithyasagar.com ) , தமிழ் ஆத்தர், வார்ப்பு, செய்தி.காம், தமிழர் உலகம், தமிழ்த்தோட்டம், உலக தமிழர் இணையம், தமிழர்களின் சிந்தனை களம், தமிழ்மணம், திரட்டி.காம் போன்ற இணையதளங்களில் நம் கவிதைகளை அன்றாடம் நீங்கள் வாசிக்கலாம்.

   எங்கேனும் பிரசுரிக்கும் தேவைக்கு அச்சிட்டு கொண்டு போக எனில் நம் தளத்திலிருந்து.. http://www.vidhyasaagar.com -லிருந்து எந்த படைப்பை வேண்டுமாயினும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். தவிர தனியாக அனுப்பும் நேரம் மிகக் குறைவு என்பதால் மன்னிக்கவும், அல்லது வேறு ஏதேனும் சிறப்பு தேவைக்கெனில் சொல்லுங்கள் நேரம் ஒதுக்கி இயன்றவரை அனுப்ப முயல்கிறேன். தங்களின் பேரார்வத்திற்கு மனம் மகிழ்வு கொள்கிறேன்.

   மிக்க நன்றிகளுடன்..

   வித்யாசாகர்

 28. Arumugam Rajendran சொல்கிறார்:

  அன்பிற்கினிய ஆருயிரே..

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   இத்தனை பாசத்தை ஒருவர் மேல் கொள்ளுமளவு மனதை விசாலமாகவும், அன்பின் ஆழத்திலும் வைத்துள்ளீர்களே, பாராட்டுக்குரியவர்கள், நீங்கள். பேசுங்கள் தோழரே…வணக்கம்!

   பேச நேரமில்லாவிட்டாலும் பரவாயில்லை; படித்து செல்லுங்கள்..

   நன்றி!!

 29. sarala சொல்கிறார்:

  வித்யா சாகர் வித்தியாசமான படைப்பு என்று சொல்ல மாட்டேன். தாய் தமிழ் ஈன்றெடுத்த தவ புதல்வனுகுரிய ஆவேசமும் கொந்தளிப்பும் கொண்டுள்ளது உங்கள் எழுத்துகள். ஒரு கவிஞனால் மட்டுமே கண்டதை எல்லாம் காதலிக்க முடியும். நீங்கள் கவிஞன் தான் இல்லை என்றால் எம் மக்களுக்கு சமமாக இயற்கையையும் காதலிபீர்களா? எதார்த்தமான எழுத்துகள் மனதில் பதிப்பு செய்கிறது. தொடருங்கள், உங்கள் பயணத்தில் பின் தொடருகிறோம்..

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தங்கள்; அன்பில் மட்டும் மெய்சிலிர்த்தேன் என்று சொல்ல வாய்ப்பே கொடுத்திடவில்லை தான் நீங்கள். ஆயினும் தெளிவாக விமர்சிக்க முற்பட்ட அக்கரையில் முழு அன்பிருந்தது சரளா.

   ஒரு கவிஞன் என்பதில் பெருமையில்லை என; எதையோ உணராமல் மறுப்பதை காட்டிலும் “ஒரு தமிழன் என்றதில் //தாய் தமிழ் ஈன்றெடுத்த தவ புதல்வனுகுரிய// பெரு மகிழ்வு கொள்கிறேன்.

   எழுத்தாலும்.. உணர்வாலும்.. அன்பாலும் பெருமிதம் கொண்டு இணைந்திருப்போம்.

   மிக்க நன்றி!!

 30. SAKTHI சொல்கிறார்:

  உங்கள் வலைத்தளம் மிகவும் நன்றாக உள்ளது.
  மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தோழா.

  உங்கள் பயணங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்………………………….. தோழா..,

  சக்திவேல்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி சக்தி, உங்களை போன்றோரின் மகிழ்வே எனை போன்றோரின் பயணத்தின் காரணமெனக் கொள்க. தொடர்ந்து வாசியுங்கள்.. உலக நலனுக்கென நிறைய பேசுவோம்.. சிந்திப்போம்.. நல்லவைகளை மட்டும் கருத்தில் எடுத்து செயல் படுவோம்!

 31. விஜய் ரூபன் சொல்கிறார்:

  திரு வித்தியாசகர் அவர்களுக்கு எனது வணக்கங்கள்,

  எதிர் பாராத விதமாக தங்களின் வ​லைப்பதி​வைப் பார்க்கக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி.

  தங்க​ளைப் ​போல் என்னால் கவி​தைகள் எழுத முடியாவிட்டாலும்
  பிறர் எழுதும் கவி​தைக​ளை படிக்கவும் ரசிக்கவும் ​தெரிந்தவன்….

  அதிலும் உங்கள் கவி​தைகள் என்​னை மிகவும் கவர்ந்தன….

  என்​னையும் தங்கள் வாசகனாக ஏற்றுக் ​கொள்ளவும்
  முடிந்தால் முகம் ​தெரியா நண்பனாகவும் கூட….

  எனது வ​லைப்பதிவின் முகவரி:- http://singingstarvijay.wordpress.com/

  நன்றி
  என்றும் அன்புடன் விஜய்….

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   அன்பு தம்பிக்கு,

   உயிர்களை நேசிக்கும் உன்னதமே மனிதம். அந்த மனிதம் வளர்க்கவே எழுதத் துணிந்தேன், பிறகெப்படி ஒரு நடப்பை மறுப்பேன்.

   தங்களின் வலைத்தளம் கண்டேன். மிக ரம்யமாக மனதில் இடம் கொள்கிறது.

   //மனிதனொடு சமத்துவத்தைப் பேணுவோம் மனிதத்தில் புனிதம் காண்போம் மனித நேயம் வளர உறுதி பூணுவோம்//

   //மனிதம் கொன்று வாழும் உலகில் – நானும்
   புனிதம் கொண்டு வாழ நினைக்கின்றேன்
   மீறும் என் உணர்வுகளால் – ஏனோ
   மிருகம் கொண்டும் வாழ்கின்றேன்//

   போன்ற வரிகளை காண்கையில் எனக்கு என் “கனவு தொட்டில்” நாவலுக்கு எழுதிய சமர்ப்பணக் கவிதை நினைவில் ஊறுகிறது விஜய்.

   நல்ல தளம். மனது நிறையும் கவிதைகள். முத்தாய்ப்பான முதிர்ந்த வரிகள். மனிதனின் மனதை பொதுவாக பறைசாற்றும் வளமையான சிந்தனை. மிக அருமை. தொடர்ந்து எழுதுங்கள். சாதிப்பீர்கள்.

   மிக நல்ல கவிஞராக வரக் கூடிய ஒரு எழுத்தாற்றல் உங்களிடமும் உண்டு. முயன்று செயலாற்றுங்கள். உங்களின் முயற்சி இச் சமூகத்திற்கு ஓர் உயர்ந்த படைப்பாளியை கொடுக்கட்டும்.

   வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும்..

   வித்யாசாகர்

 32. chris சொல்கிறார்:

  simply fantastic…. keep up ur good work. all the very best.

  எளிமையில் எழில் பூண்டெழுகிறது உங்களின் படைப்புகள். தங்களின் நற்பணி தொடரட்டும். எல்லாம் வென்று-மிக மனம் மிக்க நல்வாழ்த்துக்கள்!

 33. வித்யாசாகர் சொல்கிறார்:

  எழுத்தினூடே இதயமும் சிக்கிக் கொண்டதில் தித்திக்கிறது போல் கிரிஷ். நீங்களெல்லாம் முன்னிருக்க எத்தயக்கமுமின்றி எழுதித் தீர்ப்பேனே; என் வாழ்வை!

  மிக்க நன்றி கிரிஷ்!!

  • ruby சொல்கிறார்:

   எழுத்துலகை அரசாள வந்திருக்கும் உங்களுக்கு எந்தன் இனிய வாழ்த்துக்கள். தொடரட்டும் உமது எழுத்துப் பயணம். வாழ்த்தட்டும் ரசிக நெஞ்சங்கள். வளர்க செழிப்புடன் உமது இனிய எழுத்துப் பாதைகள்..

   என்றும் தோழமையுடன்..
   உங்கள் ரசிகை

   • வித்யாசாகர் சொல்கிறார்:

    என்ன வார்த்தை இது ரூபி. இத்தனை அன்பா. அத்தனை ஆழ்ந்து வாசிக்கிறீர்களா.. ? மெய்சிலிர்க்க வைக்கிறீர்களே ரூபி. தான் வாழ்த்தி, பிறர் என்னை வாழ்த்தவும் விரும்பி, என் செழிப்புக்கு வாழ்த்து சொன்ன என் ரசிகையை; அண்ணனாய் தலைமேல் சுமந்து அன்பு செய்தேன் ரூபி. மிக்க நன்றிமா…

 34. Sureshpriya சொல்கிறார்:

  வணக்கம் வித்யா. உங்களின் கவிதை தொகுப்பொன்று கண்டேன். (எத்தனையோ பொய்கள்). துளிப்பாக்கள் அனைத்தும் மிக அருமை. மிக மிக அழகாக எழுதி இருந்தீர்கள். வித்யா என்று சொல்ல ஆசையாக இருந்தது. அதனால் தான் இப்படி எழுதினேன். தவறெனில் மன்னிக்கவும். தங்களின் கவிதை பயணம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..

  அன்புடன்

  சுரேஷ் பிரியா

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   குருடனுக்கு கண் தந்து விட்டு ஐயோ, கண் தந்து விட்டேன் மன்னிக்கவும் என்பது போல் உள்ளது சகோதரி உங்களின் அன்பு. வித்யா என்று அழைக்கத் தானே வித்யசாகரானேன். தங்களின் வாசிப்பிற்கும் அன்பிற்கும் பெருத்த நன்றிகள் உரித்தாகட்டும்.

   நான் எதிர்பார்த்து, நல்ல வரவேற்ப்பை நோக்கி காத்திருக்கும்; இன்னொரு நல்ல படைப்பு அது, தற்போது வெளியாகியுள்ள “எத்தனையோ பொய்கள்”. ஒருமுறைக்கு இருமுறை படிப்பின் இன்னும் அர்த்தங்கள் நீளும் என்பதை இரு முறை படித்தவர்கள் உணரக் கூடும். மிகையாய் சொல்லவில்லை உறவுகளே.. ஒரு தகவலாக தெரியப் படுத்துகிறேன். உணர்ந்ததாக விமர்சனங்கள் சொன்னதில் தான் இப்படியென அறிந்தேன். படித்துவிட்டு சொல்லுங்கள் உறவுகளே..

   http://vidhyasaagar.com/2010/06/17/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be/

 35. sarala சொல்கிறார்:

  உங்களை போன்ற எழுத்தாளனின் விமர்சினதிற்காக என் கவிதை பக்கத்தை அனுப்புகிறேன்
  மு.சரளாதேவி (கோவை) கவிதைகள்
  http://tamilamutham.net/site/index.php?option=com_content&view=category&layout=blog&id=142&Itemid=118http:
  http://tamilsevai.com/saraladevi/index.php?id=1

 36. வித்யாசாகர் சொல்கிறார்:

  வணக்கம் சரளா,

  கவிதைகள் படித்தேன். உங்களின் படைப்புகள் வந்துள்ள பக்கங்கள் பார்த்தேன்.

  என்ன தான் உலகம் பற்றி பேசினாலும் எப்படியோ இதயம் தொட்டு விடும் கவிதைகள் கவிதைகள் சரளா. எல்லாம் எனக்காகவே எழுதியது போன்ற ஒரு அன்பின் ஏக்க உணர்வு படிக்கும் வாசகர்களுக்கு எழும் சிந்தனை கோணங்கள். நிறைய எழுதங்கள். எழுத்துலகம் உங்களை போன்ற வீரியம் மிக்க கவிதாயினிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்தே காத்திருக்கிறது சரளா..

  நாளைய நம்பிக்கை நட்சத்திரங்களாய் மின்னும் வானில் உங்களையும் ஒரு சிறப்பு நட்சித்திரமாக காணும் நபிக்கையில்.. மிக்க வாழ்த்துக்களுடன்.. மிக்க அன்பும் உரித்தாகட்டும்!

 37. priya சொல்கிறார்:

  ur kavithai’s r excelent

  உங்கள் கவிதைகள் மிக போற்றத் தக்கவை!

 38. Very Nice Brother your All Story And Love Very Like

  உங்களின் அனைத்து கதைகளும் மிக்க அருமை சகோதரர். காதல் கவிதை மிகையாய் பிடித்தது!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி மகிந்தன். பார்த்துவிட்டு போவோருக்கு மத்தியில், நேரமின்றி போவருக்கும் சேர்த்து உணக்ளை போன்ற நேரமெடுத்து பதிவிடும் மனங்களின் அன்பில் நன்றி கொண்டு ‘நிறைந்து தான் போகிறது மனசு..

 39. xavier சொல்கிறார்:

  தங்கள் தளம் மிக அருமை, அழகு, வாழ்த்துக்கள் அண்ணா..
  நிறைய எழுதுங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்..
  மிக்க நன்றி உங்களுக்கு..

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றிப்பா… உங்களின் ரசனைக்காய், உங்களை போன்றோர் படிக்கிறீர்கள் என்று தானே, என் எழுத்துக்கள் என்னையும் விழுங்கி தன்னையே எழுதிக் கொள்கிறது!!

 40. shanjeewan சொல்கிறார்:

  கவிதை கண் கொண்டு பார்த்தேன்
  வானத்தையே அழைத்தது
  இங்கு வந்துப்பார் உன் பூமேனி அழகை என்று;
  உங்கள் கவிதைகள்!

  “அண்ணா நம் தமிழ் ஓங்கட்டும்” வாழ்த்துக்கள்!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என் அன்பு தம்பி சந்ஜீவனுக்கு, வணக்கம்.

   உங்களின் ‘கவிதை கண்ணில் பார்த்த அழகு, என் மனதின் அன்பு கண்ணினை மிக பறந்து விரிய வைக்கிறதுப்பா. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்…

 41. ramesh சொல்கிறார்:

  கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது.. தொடர்ந்து எழுதுங்கள்..நன்றி

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ரமேஷ். எழுதியதை போல் வாழ்வதிலும், வாழ்வதை எழுதுவதிலும் இருக்கும் உண்மை படிப்பவரை மிகையாய் கவர்கிறது. இன்னும் முறையாய் சமுதாய சீர்பெறலுக்கு ஒப்ப வாழ்ந்து இன்னும் நிறைய சரியாகவும் நேர்த்தியாகவுமெழுத முயற்சிக்கிறேன்!

 42. Tamilparks சொல்கிறார்:

  மிகவும் பயனுள்ள தளம், ரொம்ப நல்ல பகிர்வுகள், உணர்வு பூர்வமான கவி மழைகள் என்னை நனைக்க செய்தது. அதோடு பாச மழையில் நனையும், என் உயிரையும் கொடுக்கவல்ல நட்பு உங்களின் நட்பு. இதெல்லாம் அன்றி நம் தமிழ்த்தோட்டம் வளர்ச்சிக்கும் உதவிய அன்பு உள்ளம்.. நீங்கள் என்பதை நன்றியோடிங்கே நினைவு கூறுகிறேன்.

  வாழ்க தோழரே, வாழ்க உங்கள் தொண்டு, வாழ்க நம் தமிழ் , வாழ்க நம் தமிழர்கள்!

  தமிழ்த்தோட்டம்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். தமிழின் வளர்ச்சிக்கு, தமிழர் சிறப்பிற்கு எங்கெல்லாம் என்னவெல்லாம் எந்நாளும் செய்ய முடியுமான வாய்ப்பு வருகிறதோ அதை செய்ய முயற்சிக்கிறேன். தங்களின் அன்பிற்கு என்றும் பயனுள்ளவனாய் இருக்க முயலும் எண்ணம் பதிந்துக் கொள்கிறேன். மிக்க அன்பும் நட்பும் பெருகட்டும்… வாழ்க; வளர்க!

 43. ஜெயராஜ்செல்வம் சொல்கிறார்:

  அன்புள்ள தோழர் வித்யாசாகர் அவர்களுக்கு,

  உங்களுடைய வரிகள் எனக்கு இணையதளத்தில் தான் பரிட்சியம்,
  படிக்கும் பொழுதுகளில் அவ்வளவு எளிமை தெளிவு..
  உங்களின் எழுத்துலகம் வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துக்கள்.

  உங்களை நேரில் சந்தித்து உறையாட விருப்பப் படுகிறேன்.

  என்றும் தமிழ் போன்று செம்மையாக வாழ என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயராஜ்செல்வம்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்பு உறவிற்கு வணக்கம்,

   மிக்க நன்றிகளுக்கு உரித்தானேன். குவைத்திலிருப்பீர்களேயானால் ஓர்தினம் சந்திப்போம், அல்லது ஊரில் இருப்பினும் ஊர்வருகையில் சந்திப்போம், அதுவரை எழுத்தாலும் மனதாலும் இணைந்தே இருப்போம் தோழர்!

   தங்கள் அன்பும் வாழ்த்தும் நிச்சயம் நமை வளப்படுத்தும்’ என்பது உங்களின் மனது நிறைந்து நீங்கள எழுதிய உங்களன்பில் தெரிகிறது.. உங்களை போன்றோர் உள்ளவரை; எனைப் போன்றோரின் பயணம் இனிதே வெல்லும்!

   http://vidhyasaagar.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

 44. ஜெயா. சிவா சொல்கிறார்:

  நண்பரே
  அற்புதம். உணர்சிபூர்வமான வரிகள்.
  தமிழ் உலகம் பயன் பெறும். பணி தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்.

 45. ஜெயா. சிவா சொல்கிறார்:

  அறிவை (வித்யா) அறிந்துதான் பெயரிட்டார்களா பெற்றோர்

 46. வித்யாசாகர் சொல்கிறார்:

  மிக்க மகிழ்ச்சி ஜெயா..

  உங்களின் பூரிப்பு கண்டு எதையோ சரியாக செய்கிறோம் போல் எனும் உழைப்பிற்கான மகிழ்வினை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்..

  வித்யா என் இறந்த தங்கையின் பெயர். சாகர் என்பது என் அன்பு நிறை தோழியின் நினைவாக சேர்த்துக் கொண்ட பெயர். மொத்தத்தில் வித்யாசாகர் வைத்ததல்ல, பன்னிரண்டு வருடத்திற்கு முன் கிடைத்தது. அல்லது வைத்துக் கொண்டது.

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

 47. கவித் தம்பி..! வணக்கம்.

  கண்டுபல நாளானாலும்
  கவிதையும் கருத்தும்
  காண்கிறேன் பொழுதும்!

  எழுத்தைத் தவமாய்
  இயற்றுவது எப்படி
  என்பதைக் கற்க…
  எல்லாரும் அணுக வேண்டிய
  இனிய முகவரி தங்களுடையது
  என்பதை அறிவேன் நான்!

  என்
  கங்கை மணிமாறன் .வேர்ட் பிரஸ்.காம்
  கண்டு பதிலிடுக. நன்றி

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தீ பொறி பறக்கும் கனல் கொண்ட தமிழில்
   வாழ்வின் வசந்தம் பரப்பப் பேசும் – சந்தக் கவி
   எம் சொந்தக் கவி
   ஒல்லிக் கவிஞனாய் இருந்தாலும் – தன்
   வெல்லும் வார்த்தைகளை எக்காலத்தையும் தாங்கும் கவி
   நான் பார்த்து ரசித்த கவி
   பேசினால் இவர் போல் பேசவேண்டும் என்று
   முதன்முதலாய் நான் கண்டு வியந்த கவி

   இத்தனை அருந்தும் அன்பிலும் பண்பிலும்
   வானம் கடந்து நிற்கும் என்றைக்குமான எங்களின்
   குவைத் மக்களின் மனமெலாம் நிறைந்த –
   பெரும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய

   ஐயா அவர்களுக்கு இணையத்தின் பெரு – வரவேற்பும்
   மிக்க அன்பும் வாழ்த்துக்களும் வணக்கமும் நிறையட்டும்!

   தங்களின் இந்த வலைப் பூவைப் பற்றி வேறென்ன சொல்ல ஐயா, இரண்டு
   சொல்லலாம். ஒன்று, இப்படி தன்னை அறிமுகப் படுத்தவே அத்தனை தன் மீது அசரா உறுதியும், நம்பிக்கையும் – அவசியப் பட்டால் நல்லவைக்கே சமுகம் எரிக்கும் தைரியமும் வேண்டும்.

   இரண்டு; நீங்கள் சொன்ன அத்தனைக்கும், உங்களின் இத்தனை அழுத்தமான நம்பிக்கைக்கும் மிக முழு தகுதியானவர் நீங்கள்.

   மிக்க வாழ்த்துக்களும், இன்னும் பல சாதனை படைக்க இறை அருளும் நிறையட்டும் ஐயா..

   வீட்டில் சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள். அவர்கள் மிக நன்றாக வருவார்கள் என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு!

   பேரன்புடன்…

   வித்யாசாகர்

 48. seasonsali சொல்கிறார்:

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
  தங்களை அறிய மகிழ்ந்தேன் .பாண்டிச்சேரி சார்ந்தவர் என்பதில் இன்னும் மகிழ்வு .பாண்டிச்சேரி வக்கில் ரசீத் (கம்யூனிஸ்ட் தொகுதியில் போட்டியிட்டவர் ) எனது அண்ணன் மருமகன் ஆவார் .
  please visit:

  * IN THE NAME OF ALLAH
  * nidurseason
  * nidurseasons (blogger)
  * Seasons Ali Video
  * SEASONS–NIDURs
  * SEASONS-NIDUR
  * SEASONSALIwordpress.com/
  * SEASONSNIDUR
  * SEASONSNIDUR
  * seasonsnidursite
  * شيء بقلبي shayunbiq

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தங்களின் விவரம் அறிந்தமையில் எனக்கும் மகிழ்ச்சி நிறைகிறது. நேரம் அமைகையில் நிச்சயம் சென்று பார்க்கிறேன் ஐயா..

   வாழ்க்கையின் வரங்கள் நல்ல மனிதர்களின் வார்த்தைகளாலும் தரப் படுகின்றன..

   மிக்க நன்றி!!

 49. Meenu சொல்கிறார்:

  அன்பின் வித்யாசாகர் அண்ணாவுக்கு .உங்களை வித்யா அல்லது அண்ணா என்று அழைத்தேனோ என்று எனக்கு நினைவில் இல்லை .மன்னிக்கவும். ஆனா உங்கள் கவிதைகள் படித்த நினைவு உள்ளது.உங்கள் ஆக்கங்கள் படித்தேன்.மிக நன்றாக உள்ளன. உங்கள் அறிமுகம் மிக அழகா இருக்கு .உங்கள் புகைப் படம் பார்த்த நினைவும் உள்ளது.இங்குள்ள சிலரின் பெயர்கள் பழக்க பட்ட பெயர்களா இருக்கு .ஆனா சரியா தெரியல. இன்னும் உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள் வித்யாசாகர்.
  அன்பு மீனு

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்பு மீனுவிற்கு வணக்கம்..

   மறுபிறவியில் முந்தைய ஓர் உறவுடன் பேசும் மகிழ்வும் அதோடு கோபமோ வருத்தமோ ஏதோ ஒன்றும் உடன் சமபங்காக எழுகிறது..

   மீனுவிற்காக மட்டுமே தோழமையுடன் சகோதரப் பாசத்துடன் ஒரு நாள் முதுக்க இதயம் இயங்கியும் நின்றும் கூட போனதுண்டு..

   என் எழுத்துக்களை உலகளவு விரித்த கண்களில் படித்தவர் நீங்கள்.. அப்பாவிற்கு வணக்கத்தை சொல்லவும். மீண்டும் எழுத்தினால் கண்டதில் பேசியதில் ஓர் நிமம்தியும், உள்ளூர மகிழும் மகிழ்வின் பெருக்கோடும் வணக்கத்தொடும் நிரியாகிறேன்.. மீனு!!

 50. அகஸ்டின் சொல்கிறார்:

  உங்களை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் கவிதைகளை நான் உங்களின் புத்தகவாயிலாக படித்திருக்கிறேன். உங்களுடைய வளர்சி எங்களின் வெற்றி.

  நன்றி வணக்கம்..

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி உறவே..

   உங்களின் அன்பும் வாழ்த்துக்களும் எனக்கு பலமாக நின்று என்னை வளர்க்கிறதெனில்; அதன் பலன் உங்களைப் போன்றோரின் நலனுக்கானதாகவே இருக்கும். தொடர்ந்து எழுத்தாலும் மனதாலும் இணைந்திருங்கள்..

 51. selvakumar சொல்கிறார்:

  என் பாசத்திற்குரிய பசிபிக் பூங்கடலே….

  நீங்கள் எழுதுங்கள்; படிக்க நாங்கள் காத்திருக்கிறோம்..

  செல்வக்குமார்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   இப்படித் தான் சிலநேரம் என் எழுத்தின் தவத்தின் பலன்; மீண்டும் மீண்டுமான என் எழுத்தா அல்லது உங்களைப் போன்றோரின் அன்பா என்றொரு எண்ணம் எப்பொழுதிற்குமாய் மேலிடுகிறது. உங்களை போன்றோர் இருக்கும்இந்- நம்பிக்கை தான் என் எழுத்துப் பயணத்திற்கான பலமும்.. ஆகிறது. மிக்க நன்றி உறவே!!

 52. வாழ்த்துக்கள்.
  தங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   //மௌனத்தை இறுகப்பற்றியபடி
   இறந்தபடியே நடப்பது வசதியாகப் போயிற்று…//

   இருப்பை எண்ணி வருந்தி உயிர்ப்பை துச்சப் படுத்தி; இப்படி வாழும் நாமென்ன மனிதரா என்றொரு கேள்வியை எப்படியோ எழுப்பியே விடுகிறது மீண்டுமிந்தக் கவிதையும்.

   நீலமாயினும், காலத்தின் கணக்குப் படி நிராகரிக்கப் பட வேண்டாத நல்லக் கவிதை. வரிக்கு வரி நம் வாழ்தலை பற்றி பேசி வருத்தப் பட வைக்கையில்; இனி என்ன தான் செய்யப் போறோமோ எனும் குரல் உள்ளிருந்து நெருப்பாய் சுட்டபடி புத்தியில் உரைக்கிறது..

   மிக்க வாழ்த்துக்கள் சந்திரா.. உங்களுக்கும்! மேடையில் வாசிக்கக் கேட்குமினிய குரல் போல; இனிய கவிதைகளின் சொந்தக் காரியின் சந்திரா இரவீந்திரனின் வாழ்த்தினில் மகிழ்வுக் கொண்டேன்!!

 53. hema சொல்கிறார்:

  வித்யா தங்கள் கவிதை பணி மென்மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ஹேமா. பல வேலைகளின் ஓட்டத்திற்கு இடையே, இன்னல்களுக்கு இடையே, வருத்தங்களுக்கு மத்தியிலும்; சற்று இளைப்பாறக் கிடைக்குமிடம் உங்களைப் போன்றோரின் அன்பு வார்த்தைகள் கொட்டிக் கிடக்கும்; மனமன்றி வேறில்லை..

 54. rathnavel natarajan சொல்கிறார்:

  நல்ல கவிதைகள் நிறைந்துள்ளன..

  வாழ்த்துக்கள்.

 55. suganthiny75 சொல்கிறார்:

  dier brother ur kavithai is exalent. congratulation bye na

 56. suganthiny75 சொல்கிறார்:

  மிக்க நன்றி, உங்களின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை.

 57. suganthiny75 சொல்கிறார்:

  தங்களின் கைகளுக்குள் எழுதுகோல் சிக்குண்டு எழுத்துக்களாய் நிறைகிறது, வாழ்த்துக்கள்!!

 58. suganthiny75 சொல்கிறார்:

  ரொம்ப நன்றி; தங்களின் படைப்புக்களைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்!!

 59. மகிழ்ந்தேன் சகோதரி. நம் வெளியான புத்தங்களில் சிலதின் விவரம் வலைதளத்தின் வலதுபக்கவாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, கீழுள்ள விலாசத்தில் விசாரித்தும் நம் படைப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.

  //வித்யாசாகர்
  11, சூர்யா தோட்டம்
  குதிரை குத்தி தாழை
  மாதாவரம் பால்பண்ணை
  சென்னை – 600051
  தொலைபேசி: 25942837, 9940465755//

 60. suganthiny75 சொல்கிறார்:

  இத்தனை படைப்புக்களையும் எழுதுவதற்கு தாங்கள் என்ன அமுதசுரபியா???

  • எல்லாம் கடவுள் செயலன்றி வேறில்லை. என்றாலும், இதெல்லாம் மழைக்காலத்தில்; வெயில் காலம் கருதி உணவினை சேமிக்கும் எறும்பினைப் போல், எதிர்காலத்து சமுக மாற்றம் கருதி செய்யும் ‘இந் நிகழ்காலத்து எழுத்து சேமிப்பு சுகந்தினி.

   எல்லாம், சிறுசிறு துளி தான், என்றேனும் ஓர்நாள் பிரளயமாய் பொங்கி மக்கள் மனதில் வளம் சேர்க்கப் பாயுமெனும் நம்பிக்கை யுண்டு!!

 61. suganthiny75 சொல்கிறார்:

  உங்களின் நம்பிக்கை என்றும் வீண் போகாது!!

 62. suganthiny75 சொல்கிறார்:

  thaangal sinthija oruthuly vijarvai inru peru vellamaaha maariullathu ithai ninaththu perumaippaddathundaa?

 63. suganthiny75 சொல்கிறார்:

  கோபத்தின்
  உச்சத்தில்
  வாழ்வின் அவலங்களே
  கைகொட்டிச் சிரிக்கின்றன;

  நரநரவென்று மென்ற
  பற்களின் நசுக்களில்
  இரத்த உறவுகளே
  சிக்கித் தவிக்கின்றன;

  இளமை தொலைந்தும்
  முதுமை கடந்தும்
  மரணத்தின் உச்சம்வரை
  கோபத்தின் கறை அகலாமலே உயிர்களும் பிரிகின்றன;

  நட்பு மறந்து, நன்றி துறந்து
  கோபத்தால் துச்சப் படுத்தப்பட்ட உறவுகளை
  மீண்டும் சிரித்துக் கொள்ளும் ஓர் நாளில்
  கோபம்; முழுமையாய் மீட்டுத் தருவதேயில்லை;

  கைகொட்டி சிரித்த
  நான்கு பேர் சிரிப்பிற்கு,
  காலம் முழுதிற்காய் வீழும்
  ஒற்றை பழிச்சொல்லிற்கு,
  நிறைய வீடுகளின் காரணம் –
  வீண்கோபமெனும் ஒற்றை இழுக்கே;

  இந்த வரிகள் எனக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு கண்டிப்பா ஒவ்வொரு மனித ஜென்மத்திற்கும் போய் சேர வேண்டிய ஒரு செய்தி தான் ஒரு மனிதன் எவ்வளவுதான் உயரத்தில் இருந்தாலும் இந்த கோபமே அவனை ஒரு சாக்கடைக்குள் தள்ளிவிடும் என்பதை நன்றாக விளக்கி உள்ளீர்கள். அத்தனைக்கும் எனது வரவேற்பும் மரியாதைகளும் உரித்தாகட்டும்

 64. prabashkaran சொல்கிறார்:

  தங்கள் கவிதைகளில் நல்ல கருத்துகள் காண முடிகிறது தமிழ் மேல் தாங்கள் கொண்டுள்ள பற்று மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

 65. deepika sree(janani) சொல்கிறார்:

  HELLO SIR
  ALL THE BEST SIR…. WAITING FOR UR WRITING………

 66. Ashwini சொல்கிறார்:

  வணக்கம் மாமா.. நலமா? அக்கா, முகில், வித்யா நலமா? உங்களின் ஈழ கவிதைகளின் தொகுப்பான “விடுதலையின் சப்தம்” புத்தகம் படித்தேன். ஒவ்வொரு வரியும் வார்த்தையும் என்னுள் விடுதலை உணர்ச்சியை மிகையாய் தூண்டின.. மிகவும் அருமையான புத்தகம் மாமா.. இப்படி ஒரு புத்தகம் எழுதி என்னையும் அவர்கள் பற்றி சிந்திக்க வைத்தமைக்கு நன்றி …

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கம்மா, எல்லோரும் உன் போன்றோரின் அன்பாலும் இறை அருளாலும் மிக்க நலமாக இருக்கிறோம் டா. நல்லதாய் எடுத்துப் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஒரு ஆசானுக்கு சமம்மா. இன்னும் நிறைய படிக்க முயற்சி செய். குறிப்பாக அந்த ஈழத்து படிப்பினை உன் தோழமை உறவுகள் படிக்கவும் கொடு. நம் புத்தகங்கள் எல்லாமே இனி சென்னை ஹிக்கிம்பாதம்சிலும் கிடைக்கிறது, தெரிந்தோரை வாங்கிப் படிக்க சொல்லுடா. அப்பா அம்மாவிற்கு எங்களின் வணக்கத்தையும் நலனையும் சொல். மிக்க வாழ்த்துக்களும் அன்பு நன்றிகளும் உரித்தாகட்டும்மா!!

 67. sheik mujibur (jessi video vision ...kuwait) சொல்கிறார்:

  உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றியும் வணக்கமும். உலகில் படைக்கப்பட்டுள்ள அநேக ஜீவன்கள் அநேகருக்குப் பயன்பட்டுக் கொண்டே தன் வாழ்தலை கழிக்கிறது. நானும் எனை எழுத்தாய் வாழ்ந்துக் கொள்கிறேன்.. உறவே!!

 68. ஆசிரியை உமா தேவி சொல்கிறார்:

  அன்பிற்க்குரிய கவிஞர், எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களே, வணக்கம்.

  தாங்கள் எழுதிய சில நூல்களை நான் படிக்க நல்ல ஒரு வாய்ப்பினை இறைவன் எனக்கு அருளியது என் பாக்கியமாக கருதுகின்றேன். இறைவனுக்கு அதற்கான நன்றி.

  “சாமி வணக்கமுங்க” புத்தகம் பற்றி:

  அருமை அருமை மிக அருமை!

  புத்தகம் கையில் எடுத்து படித்து முடித்துதான் கிழே வைத்தேன். உங்கள் உரையாடல் போன்று கருத்து தெரிவிக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் கருத்து சொல்லும் விதம் வித்தியசமாகவும், ஏற்று சிந்திக்க சுலபமாகவும் அமைந்த’ கதை சொல்லும் முறை நன்று!

  பக்கம் 32 கவிதை மிக மிக அருமை!
  பக்கம் 57, 58 கடவுளை காண்பிக்கும் விதம் பிரமாதம்!
  பக்கம் 61,62 நம்பிக்கை மீது நம்பிக்கை வரவைக்கும் வார்தைகள் அற்புதம்!
  பக்கம் 74 குழம்பனும் நல்ல குழம்பனும்…குழம்ம்பி குழம்பி யோசிக்கணும், தேடனும் ஆழ்ந்து தேடனும்’’ என்று சொல்லிய தெளிவு பிறபிக்கும் வரிகள் பிடித்திருக்கு

  மொத்ததில் குடும்பம் , சமுதாயம் , நாடு என்று கடவுளை உணர.. இந்த கால கட்டதுக்கு ஏற்ப சொல்லியுள்ளீர்கள்.

  “எத்தனையோ பொய்கள்” புத்தகம் பற்றி:

  படித்தேன், சிந்தித்தேன்.
  பக்கம் 59,60.61 பட்டாம்பூச்சி கவிதை மிகவும் பிடித்து இருந்தது.
  மிகவும் எளிய முறையில், மிக நல்ல ஆழ கருத்துக்களோடு சிறு சிறு கவிதைகள் இருந்தன. படிக்கும் போது அக்கவிதைகள் மேலான ஈர்ப்பும், நன்கு ரசிக்கும் தன்மையையும் ஆத்மார்த்தமாக ஏற்படுகிறது.

  “வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை” புத்தகம் பற்றி:

  எவ்வளவு அருமையான தலைப்பு.
  அத் தலைப்பிற்கேற்ப ‘நம்மை சுற்றி நிகழும் தருணங்கள் அனைத்தும் அங்கே பதிவாகியிருப்பதைக் கண்டேன். உண்மையை உணர்த்தும் நிறைய அருமையான வரிகளைக் கண்டேன்.

  எல்லா கோணங்களிலும் பார்த்து, மனம் கொள்ளைகொள்ளும்
  அளவிற்கு மிக நேர்த்தியாக அழகாக நிறைய கவிதையைச் சொல்லி இருக்கீங்க.

  என்னக்கு பிடித்த கவிதை :
  பக்கம் 29: அதொரு காலம்
  பக்கம் 35 : காதலின் கால நகர்தல்
  பக்கம் 47: உன் கால் கொலுசு சப்தமிட
  பக்கம் 49: குருட்டு ‘பெண்ணின் கருப்பு வாழ்கை …மிகவும் அருமை .
  பக்கம் 54: பாவமமிந்த பைத்தியக்காரன்…. மிக நன்றாக இருந்தது.

  கடைசி கவிதை நேஞ்சுக்குளே நேஞ்சுக்குளே …கண்களைள் கலங்கச் செய்தது. மொத்தத்தில் இப்புத்தகத்தின் மொத்தக் கவிதைகளும் மிக நன்று!!!

  “பிரிவுக்கு பின்” புத்தகம் பற்றி:

  அருமை! அருமை! அருமை!
  காதலின் ஏக்கம்…, மனைவியின் வலி, கணவனின் அன்பு, உறவின் பரிவு, சுற்றத்தார் அக்கறை என’ எல்லாமே மனதை ஒரு கணம் கலங்க வைத்தது. மிகவும் அருமையான படைப்பு!

  வேறென்னவென்று சொல்வது…, வார்தைகள் தெரிய வில்லை எனக்கு, அவ்வளவு அருமை!

  “வாயிருந்தும் ஊமை நான்” (சிறுகதை) மற்றும் “கனவுத் தொட்டில்” நாவல் பற்றி:

  எண்ணற்ற.., சமுதாயம் சார்ந்த சாடல்களும் பதிவுமாகவுமே இவ்விரு புத்தகங்களும் எனக்குப் பட்டது. அத்தனைப் பிரமாதமாக கதையை கொண்டு செல்லும் படைப்புக்களாகவே இரண்டும் இருந்தன.

  நம்மை சீரழிக்க போவதாக அச்சுறுத்தும் சக்திகளை நம்மால் வேரறுக்க முடியும்” என்பதனை எவ்வளவு அழகாக உங்கள் கதையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.

  “அவளின்றி இறந்தேன் என்று அர்தம் கொள்” புத்தகம் பற்றி:

  ஆழமான காதலின் பரவச வெளிப்பாடு எனலாம். அவ்வளவு உணர்ந்து எழுதி உள்ளீர்கள்.. காதலைப் பற்றி. மிக நன்று.
  காதலின் அழகையும், இனிமையும், ஏக்கத்தையும், வலியையும்,
  நேர்த்தியையும் ஓர் அளவீடு கொள்ளத் தக்க வெளிப்பாடாக, உணர்ச்சிப் புர்வமாக வெளிபடுத்தி இருகிறிர்கள்.

  உங்கள் காதல் கவிதை எல்லாமே புதுமையும் அருமையும்…

  “வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு” புத்தகம் பற்றி:

  மிகவும் அர்த்தமுள்ள’ வாழிவின் பதிவுகள். நியாயமான உண்மையை மிக சுவாரஸ்யமாக, கவிநயத்தோடு படைத்துள்ளீர்கள். உங்கள் ஆழமான, தெளிவான ஞானம் இவ்வாறான படைப்புக்களில் வெளிப்படுகிறது.

  முழுக்க முழுக்க ஒரு சமூகப் பற்று கொண்டவர் படைப்பிது என்பதை’ கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சாட்சியாய் நின்றுச் சொல்கிறது .

  கடவுள் : பார்க்கும் விதத்தில் தெரியும் கண்ணாடி! (பக்கம் 13 )
  குடும்பம் : மனம் வீசும், மலர் போன்ற, உறவுகளின் முட்கள் மீது, வண்ணங்களோடு ஜொலிக்கும் மென்மையான சேலை. (பக்கம்17 )

  வாழ்க்கை : மனிதனின் பக்குவதிற்கேற்ப மாறுப்பட்ட சித்திரம்.
  தமிழ்பேசு மனமே தமிழ் பேசு: (பக்கம் 51) அருமையிலும் அருமை!

  “துடித்து எழுந்து புஜங்கள் உடைத்து,
  வீரத்தோள் தட்டி
  உலகையே தமிழுக்கு சொந்தமிடு” என உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி தமிழுக்கென பேசவைக்கும் உங்களின் எழுத்துக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் , வாழ்துக்களும், நன்றிகளையும், மனம் நிறைந்த அன்பினையும் இங்கே சமப்பிக்கின்றேன்.

  அன்புடன்,
  ஆசிரியை உமா தேவி
  மலேசியா.

 69. வித்யாசாகர் சொல்கிறார்:

  ஒரு மாணவன் படித்துப் பெருமை கொள்வான் எனில், தன்னை தன் தவறிலிருந்து சரிசெய்து திருத்திக் கொள்வானெனில்’ நான் ஜெயித்துவிட்டதாய் அர்த்தம் என்று கூறியுள்ளேன்.

  இங்கே ஆசிரியை ஒருவரின் வாழ்த்திற்கு வாக்கப்பட்ட என் எழுத்தினை தந்த இறைசக்திக்கே நன்றிகள் அனைத்தும்!!

  அதையும் கடந்து, படித்ததோடு நின்று விடாமல், சிரமம் பாராது, இத்தனை விரிவான விளக்கமான கருத்துரை அளித்த தங்களின் மனநிலைக்கும், நல்லுணர்விற்கும் என் என்னிலடங்கா நன்றியுணர்வும் வணக்கங்களும் உரித்தாகட்டும் உமா..

 70. கே . பாலாசி(ஜி ) தமிழன் , குவைத் , சொல்கிறார்:

  நீங்கள் ஒரு கவிதை வங்கி…

 71. breeze.mbala சொல்கிறார்:

  அணைத்து எழுத்தாளர்களுக்கு மத்தியில் ஒரு வாழ்வியல் கருத்துகளை பொதிந்து வரும் உங்களது படைப்புகள் அனைத்தும் அருமை ,மிகவும் எதார்த்தமான படைப்புகள்……….உங்களது எழுத்து பணி தொடரட்டும் ………………வளர்க சிகரத்தை நோக்கி ,நன்றி!

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும். திக்குத் தெரியாமல் புத்தகத்தை தஞ்சமடையும் ஒரு மனசுக்கு கொஞ்சம் நிறைவைத் தரும் வழியையேனும் காட்டுவதாய் இருப்பதே எழுத்திற்கு சிறப்பு. அதன் உச்சியை தேடியே அலைகிறது என் எழுத்துக்களும்…

 72. sushruva சொல்கிறார்:

  நாளும் வாழ்வும் நல்லதென‌
  தமிழின் சந்தம் கவிதையென‌
  குறுநாவல் தேனென தித்திக்க‌
  தமிழன்னையின் பிள்ளையென‌
  தெவிட்டா கவியமுது படைக்கும்
  வித்யாசாக‌ரெனும் விளைநிலமே
  வாழ்க நீ தமிழ் தொண்டிற்கு!

  என்றும்: சுஷ்ருவா

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   காற்று பட்டால் கரைந்துப் போவதுபோல் போவதற்கல்ல, கரையும் மனதில் துளிர்க்கும் புது மலர்சியின் சிந்தனைக்கென எழுத்தாகக் கூட்டிவைக்கிறேன் இங்கு என் எண்ணங்களை. அது காலம் கடந்தும் என் உறவுகளுக்கு, என் அண்ணன் தம்பிகளுக்கு அக்காத் தங்கைகளுக்கு வழிகாட்டுமென ஒரு நம்பிக்கையில் உயிர் நனைகிறேன் நாளும். என்றாலும் தீர்ப்பினை காலம் கையிலெடுத்துக் கொண்டு காற்றாக வீசிக் கொண்டிருக்கிறது. அந்த காற்று திரும்பி எனக்காகவும் ஒருநாள் வீசுகையில் என் கனவுகள் அன்று மெய்ப்படும்..

   அப்படி மெய்ப்படும் என் கனவுகளின் உயிர்பொருட்களாக உங்களின் வார்த்தைகளெல்லாம் இருக்கும் சுஸ்ருவா!

 73. karthikeyan சொல்கிறார்:

  உன்னதம்.. உன்னதம்…

 74. kavinger mannai usman சொல்கிறார்:

  மொழி வெறும் தொடர்புக்கு மட்டும் உண்டானதல்ல.. அது நம் உயிரின் ஆன்மா. அதை தாங்கள் மென் மேலும் வலுப்படுத்துகின்றிர்கள், தங்களின் எழுத்தால்…

  நன்றி; எனது மொழியை இன்னும் இளமையாக்கிய உங்களுக்கு …

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   “மொழி உயிரின் ஆன்மா” தமிழர் தனது நெற்றியில் பதித்துக் கொள்ள வேண்டிய வரி. தங்களின் ஆழமான பார்வை இனம் மொழி பற்றிய அக்கரையில் நனைகிறது என் எழுத்துக்களும், எனவேப் பூத்த உங்களின் இளமைக்குள் முளைக்கும் எனக்குமான எழுத்தின் சிறகளுக்கு வேண்டி நன்றிகள் பல…

 75. santharaj சொல்கிறார்:

  hello sir all the best sir waitlng for ur writing

 76. santharaj சொல்கிறார்:

  hello sir all the best waiting for ur writing

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வணக்கம் சந்தராஜ். என் எழுத்திற்கு ஒருவர் காத்திருப்பார் எனில் என் அடுத்தடுத்த கவிதையின் மூலசக்தியும் அவரே.., உங்களின் நம்பிக்கை பொய்க்காமலிருக்க இறையருள் துணை நிற்கட்டும் ராஜ். இயன்றவரை எழுதுவேன். எழுதாத பொழுதினை என் மரணத்தாலேனும் கொன்று தீர்ப்பேன்…

   நன்றியும் நிறைய அன்பும் ராஜ்..

 77. santharaj சொல்கிறார்:

  ur kavithai’s r excelent

 78. sudha சொல்கிறார்:

  all the ur kavithai’s r excelent

 79. sudha சொல்கிறார்:

  all the best excelent kavithai

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   வார்த்தைகள் வரமாவதுபோல் வரமாயின கவிதைகளும். கவிதைகள் வருகையில் எழுதப்படுகிறது. வராதப் பொழுதுகளில் உயிர் மையிடுகிறேன், காலதவம் கொள்கிறேன். முடிவில்; முடியாததும் கவிதையாகிறது சுதா.

   தங்களின் மெச்சுதலில் மகிழ்ந்தேன். நன்றியும் வணக்கமும்!

 80. revathi சொல்கிறார்:

  தொடரட்டும் உம் பயணம்……………………

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நீங்களெல்லாம் உள்ளபோது நானெங்கேப் போவேன்..? நிச்சயம் எழுத்து புள்ளியாய் கரைந்து காற்றிற்குள் தீரும் வரை; நான் எழுத்தாகவே கலந்திருப்பேன்..

 81. revathi சொல்கிறார்:

  //கொட்டும் முரசு கொட்டட்டும்;
  பெய்யும் வானம் பெய்யட்டும்;
  பூக்கும் மலர்கள் பூக்கட்டும்;
  சிரிக்கும் உதட்டோர ஏளனம் கடந்து –
  அழும் விழியோர ஈரம் கடந்து –
  விடியும் ஏதேனும் ஒரு காலை பொழுது
  எனை போன்றோருக்காகவும் விடியட்டும் உறவுகளே//

  சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்………………………….. கவிதை

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   எப்படியோ உங்களைப் போன்றோரின் பாராட்டில் என் எழுத்துக்களும் கவிதைகளாகி விடுகிறது; அதற்கான நன்றிகளைச் சுமந்தவனாகவே நின்றுக் கொண்டிருக்கிறேன் நான்; எழுத்துக்களின் மீது…

 82. Kalaiwani சொல்கிறார்:

  கவிஞர் வித்யாசாகருக்கு …
  லண்டன் தமிழ் வானொலியில் உங்கள் நேர்காணல் கேட்டேன்…
  இணையத்தளத்தில் உங்கள் கவிதைகள் ரசித்தேன் …முகில் கிரியேசனில் உங்கள் பாடல்கள் கேட்டேன் ..
  இன்றிலிருந்து உங்கள் ரசிகையானேன் …தொடருங்கள் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது .ஈழத்தமிழர்களை நேசிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்
  நல்லமனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க… நன்றி…வணக்கம்
  கலைவாணி.ஏகானந்தராஜா
  ஜெர்மனி

 83. Aravin சொல்கிறார்:

  நள்ளிரவில் தூங்கி; நள்ளிரவில் எழுந்து;
  முழு இரவையும் தொலைத்து – வாங்கிய எழுத்துக்களில் –
  ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும்; வெற்றி என்பேன் தோழர்களே!….. Great and well said… Like it u r lyrics.. Aravin Prince
  aravinprince.blogspot.com

 84. SuccessKarthick சொல்கிறார்:

  You very Great person Anna 👍

 85. Sankar சொல்கிறார்:

  Super very nice….

  By sankar kuwait

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றிப்பா. நீங்கள் எல்லோரும் சேர்ந்து உதவியதும் பெருமகிழ்வு. உங்கள் நிறுவனத்தில் எல்லோருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் கூறுங்கள். வாழ்க.. வணக்கம்..

   மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கி பதிவை வாசிக்கவும்.. https://wp.me/pxMPc-1Z4

 86. அன்னை பிரகாஷ் சொல்கிறார்:

  உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை…வாழ்த்துகள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s