Category Archives: கவிதைகள்

ஈழம்

கத்தி எடுத்ததும் குண்டு வெடித்ததும் வரலாறு; குழந்தை கொன்றதும் குடி அறுந்ததும் வரலாறு; ரத்த ஆறு கடந்து மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு; பெண்களை கெடுத்து கொன்றதும் கொன்று கெடுத்ததும் வரலாறு; எல்லாம் வரலாறு வரலாறே மிஞ்சிக் கிடக்க – ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்! ——————————————- வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..

வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஏழைகளின் ஏசு கிருஸ்த்து

உலகம் புரட்டிப் பார்த்த வரலாறு இன்னும் திகட்டிவிடாத பெரும் பேரு; காலம் கட்டிக் கொண்ட மதம் பாரு கருணை ரத்தமாய் சொட்டிய நிஜம் பாரு! ஏழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு; உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு! முள்கிரீடம் அணிந்து கையில் … Continue reading

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 10

உன் குறுகுறு பார்வையும்… குறும்பு சிரிப்பும்… நீ அழைக்கும் ஒரு ஏம்பாவும்… கலுக்கென்று கால்கொலுசு உதிர்ந்ததாய் – நீ சிரிக்கும் சப்தமும்…, உன்னை நினைத்து நினைத்து நான் அழுவதற்கு – நீ கேட்காமல் கொடுத்த பரிசுகளா? அடி என்னவளே…, மூணு முடுச்சி போட்டதால என் உயிர்மூசி ஆனவளே…! துடிக்கும் நாடி – துடிப்பில் கூட ரத்தமின்றி … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 9

நீயும் – நானும் – அன்று சேர்ந்ததால் தான்; பிரிந்துக் கொண்டன – ஜாதியும்.. மதமும்.. இனமும்.. தீண்டாமை நோயிலிருந்து!! —————————– பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக