வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,271
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மே 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!
வேறோர் வீட்டின்
வாசல் கடக்கையில் கூட
நீ அங்கே நிற்கிறாய்..
திரும்பி வரும் வரை கூட
காத்திருக்கிறாய் –
மனசு கனத்து
பார்வையில் –
மறைக்க மனமின்றி
கேட்டால் மட்டும்
பொய் சொல்லி போகிறாய்
காதலிக்க வில்லையென;
அதனாலென்ன
நான் நாளையில் இருந்து
உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை.
மனது கனத்தால்
உடனே வந்து
காதலிப்பதாக கூட
சொல்ல வேண்டாம்;
சற்று என் வாசல் கடந்து போ.
உன் காலடி சப்தத்தில்
என்.. சிரிப்பு மலர்கள்
காதலாய் காதலாய் பூத்துவிடும்!!
———————————————————-
(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!
காலையில் எழுந்து காற்றை
உள்ளிழுக்கையில் –
உள் புகுகிறாய் நீயும்,
அண்ணாந்து வானம் பார்க்கையில்
வெளிச்சமாய் பார்வையுள்
நுழைகிறாய் நீயும்,
நுகரும் முதல் வாசத்தில்
நீ என்னை கடந்த பொது
உணர்ந்த வாசம் இன்னும் விடுபடாமலே
வாசம் கொள்கிறது,
யாரோ அழைக்கையில்
திரும்பி பார்த்தும் –
உனையே தேடுகிறேன் நான்;
உணர்தல் செவியுறுதல்
எண்ணுதல் பார்த்தல் என எல்லாமுமாய்
நீயே இருக்க –
மீண்டும் மீண்டும் உனக்கான
அத்தனை எதிர்பார்ப்புகளோடும் -நீ வரும்
அதே தெருவின் வளைவில்
இன்றும் நிற்கிறேன் நான். நீ வருகிறாய்..
மழை சோ…வென கொட்டுகிறது.
மழை உன்னை நனைக்காத குடையில்
நனையாமல் நீ என்னை கடக்கிறாய்..
திரும்பி என்னை பார்க்க கூட – உன்
தோழிகள் உனக்கு அவகாசம் தந்திடவில்லை..
தெருவின் கடை மூலையில்
சென்றாவது திரும்பிப் பார்ப்பாயோ என
மனசு துடிக்கிறது..
எங்கு பார்த்தாய் நீ
சிரித்து பேசி மழை ரசித்து
கூட்டமாய் கைதட்டி சென்றே விட்டாய்.
படபடக்கும் இதயத்தை
நிறுத்திக் கொள்ள கூட இயலாதவனாய்
நிற்கிறேன் நான்.
மழை எனை நனைத்து
பூமியில் நிறைகிறது.
மழையையும் சேர்த்து நனைத்து
கண்ணீராய் கரைகிறதென் காதல்!
———————————————————-
36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்!
ஒரு சொட்டு
மின்சாரத்தின் விலை
இரு சொட்டு வெளிச்சம்.
அல்லது
யார் உயிரையோ காக்க போராடும்
ஒரு இயந்திரத்தின் –
உயிரில் துளி.
இரு புன்னகை பூக்களின்
இடையே பரவும் –
வெப்பத்தின் மூலாதாரம்.
உடல் தகிக்கும் உணர்வின்
உயிர் தொடும் – அலையில்
இடையே கலந்த இயக்கி; ஒரு சொட்டு மின்சாரம்!
உண்டு திரிதலில்
உறங்கி எழுதலில்
ஓய்வென்று அமர்கையில்
பல ஓட்டத்திற்கு மத்தியிலும்
சொட்டு சொட்டாய் –
கலந்து சேர்ந்த மின்சாரம்; அபாரத்தின் வெளிச்சம்!
வீட்டில் கேட்கும் குழந்தை
சப்தத்திலிருந்து –
வீட்டின் கடைகோடியில் எரிக்கும்
புதைக்கும்
எதற்காயினும் –
ஒரு சொட்டு மின்சாரமேனும்
இல்லாமல்;
இல்லாமை நிலையை
இருப்பாக்கிக் கொண்டது வாழ்க்கை.
கடலில் உப்பை அகற்றி
குடிநீர் கொடுக்கவும்,
குடிநீர் சேகரித்து பகுதி பகுதியாக
பிரித்தனுப்பி –
உயிரறுந்து போகாமல்
நீரால் ஒட்டிவைக்கவும்
மின்சாரத்தின் பங்கு –
நீரும் காற்றும் போல் ஒன்றாகியே போனது.
நீரின்றி இறந்து போவாய்
காற்றின்றி மூச்சடைக்கும்
மின்சாரமின்றி –
இறந்தா போவாய் மூடா; என்று யாரேனும்
நினைப்பீர்களேயானால் –
அந்த கேள்வியை நீங்களே உங்களிடம்
கேட்டுக் கொள்ளுங்கள்; அல்லது
இன்று முழுவதும் எதற்குமே
மின்சாரம் உபயோகப் படுத்துவதில்லை என
ஓர் தினம் மின்சாரத்தை நிறுத்தித் தான்
பாருங்களேன்?
முகத்திற்கு நேரே சுற்றும் ஈயிலிருந்து
மூக்கில் அமர்ந்து கடிக்கும் கொசுவிலிருந்து
தனை கேட்காமல் வியர்க்கும் உப்புநீர் வரை
மடையா அந்த மின்விசிறியை
போட்டுவிடு எனலாம்.
மின்விசிறி என்ன,
மரங்களை வெட்டி வெட்டி சூரியனிடம் கொண்ட
பகையால் –
குளிர்சாதனம் கூட தேவைபடலாம்.
எதற்காயினும்
மின்சாரம் தேவை!
ஊறுகாய் அறிக்கை விட
இட்லி சட்டினி நாக்கு தட்டி திண்ண
நிறுவனங்கள் இயங்க
மருத்துவம் பார்க்க
மருந்துகள் செய்ய
கவிதை எழுதி தட்டச்சில் கோர்க்க
புத்தகமாக்கி வரலாறு வைக்க; என
மின்சாரம் இல்லாத இடம்
காற்றும் நீரும் இல்லாதது போல் இல்லை, என்றாலும்
இல்லாதது போல் தான்!
இசையில் நினைவுகளை உசுப்பி
உணர்வுகளில் ஒரு சின்ன
அசைவை ஏற்படுத்தக் கூட
மின்சாரம் வேண்டுமளவு இசையை
செயற்கையோடு மட்டுமே
இணைத்துக் கொண்டுள்ள நம் வாழ்க்கைக்கு
மின்சாரம் இல்லையேல் –
மன அமைதி கூட இல்லை!
மின்சாரம் இல்லாத
இவ்வாழ்க்கையை
மின்சாரம் துண்டிக்கப் படும் நாட்களில்
தெருக்களில் வந்து விழும்
ஏதேனும் ஒரு வீட்டின்
ஒற்றை சாபம் கண்டிப்பாக
கத்தி கத்தி சொல்லும்; கருப்பாக்கியாவது காட்டும்!
அன்றைக்கெல்லாம் நாங்கள் என்ன
மின்சாரத்திலா இருந்தோம் என்பவர்கள்
யாரேனும் இருப்பின் –
மின்சாரமே சாராமல் ஒரு நாள்
இன்று இருந்துக் காட்டுங்களேன் – உங்களுக்கு
உங்களின் அந்த பழைய
பத்து நாளை இனாமாக
நாளையிலிருந்து தந்து விட
மின்சாரம் கொண்டு ஏதேனும் செய்துவிடலாம்.
இல்லை இல்லை யார்சொன்னது
மின்சாரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா
என்கிறீர்களா???
அப்ப சரி,
உங்கள் வீட்டை போய் சற்று
சுற்றி பாருங்கள் –
ஏதேனும் ஒரு மின்விளக்கோ மின்விசிறியோ
திறந்து வைத்துள்ள குளிர்சாதனப் பெட்டியோ
யாருமின்றி இயங்கும் தொலைக்காட்சியோ
வசிக்கா விட்டாலும் அணைக்காத குளிரூட்டிய அறைகளோ
பக்கத்து தெருவரை கேட்க கத்திக் கொண்டிருக்கும்
வானொலிப் பெட்டியோ
டம்பமடிக்கும் விளம்பர பலகைகளோ அல்லது
ஏதேனும் ஒன்று
துண்டிக்கப் படவிருக்கும்
மற்றொரு நாளின் மின்சாரத்தை
இன்றைக்கே தொலைத்துக் கொண்டிருக்கும்!
——————————————————————————-
வித்யாசாகர்
குறிப்பு: மின்சாரம் சேமியுங்கள்; வெளிச்சம் மிச்சப் படும்!
யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..
உறவுகளுக்கு வணக்கம்,
யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம்.
http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0
http://epaper.thinakkural.com/index.php?place_id=2&place=west&paper_date=2010-06-25
யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..
வித்யாசாகர்
Posted in அறிவிப்பு
Tagged அறிவிப்பு, கவிதை போட்டி, காதல், தமிழர், தமிழ், தமிழ் கவிதை, தினக்குரல், நட்பு, யாழ்தேவி, வார இதழ், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
4 பின்னூட்டங்கள்
35 கவிதையில்லை; ஒரு கடிதம்!
ஒவ்வொரு புள்ளியிலாய்
இதயங்கள் சந்தித்தே – தூர
விலகி நிற்கின்றன.
எனக்கும் நேரிடுகிறது அந்த
நெருங்கி பிரியும் புள்ளியின்
நிறைய வலிகள்.
எல்லோரையும் காதலிக்க ஆசை
எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை
கட்டல் ஏன் காமத்திற்கா?
காமம் அறுக்காத
உணர்வுகள் பொங்கியெழுந்த
ஆசையின் நிர்வாணத்திற்கு –
உடல் என்னும் சோறு போடவா???
இல்லையே… என்று நீளும்
சப்தத்தின் வீச்சு –
பிரிந்த மனங்களுக்குக்
சற்றேனும் கேட்குமா..? தெரியவில்ல.
பிரிதல்; என்ற வரையறைக்கு
என்னிடம் பேசாது புகைப்படம் பார்த்து
பேசிவிட்டுச் சென்ற – சிலரும்
அடக்கம் என்று உணர்க;
எப்படியோ அவர்கள் விட்டுச் சென்ற
கால்தடம் ஆராய்ந்ததில்
மேலே சொன்ன நிறைய புள்ளிகள்
தூர நின்றே திரும்பி சென்றதை
காட்டாமலில்லை;
ஒருவேளை
காதலெனும் பயம் கொண்டே
உறவுகள் விடுபடுகின்றனவா ..?
எனில், வேண்டாம்
நானதை கடந்து விட்டவனாய்
கை கோர்கிறேன் –
சம்மதமா உறவுகளே???
காதலென்ற வார்த்தை துறந்து
நேசிப்பென்று பெயர் வைத்து
இரண்டு கைவிரித்த இனியவனாய் காத்திருக்கிறேன்
வந்து என் இதயத்தை –
அன்பால் நிறைத்துக் கொள்வீர்களா ????
நேரிட்ட புள்ளிகள் கரைந்து
காற்றாய் போகட்டும்..
காற்றெல்லாம் நாமாய் நிறையட்டும்..
நாமாய் நிறைந்ததில்
உனக்கும் எனக்குமாய் இயங்கும் நம்
சுவாசிப்பின் கணங்கள் –
நாளைய உலகிற்கு
தமிழரின் –
இல்லை.. இல்லை.. மனிதரின் ஒற்றுமையை
பறைசாற்றி நிற்கட்டும் உறவுகளே” என்று சொல்ல எழுதிய
இந்த அறிவிப்பெப்படி கவிதையாகும்???
——————————————————————
வித்யாசாகர்
Posted in அம்மாயெனும் தூரிகையே..
Tagged அறிவிப்பு கவிதை, காதல், தமிழர், தமிழ், தமிழ் கவிதை, நட்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்
6 பின்னூட்டங்கள்



















