Tag Archives: கவிதைகள்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

25, காஜாவுக்கு திருமண வாழ்த்து!!

மணமகன்: காஜா மொஹிதீன்                       மணமகள்: ரஹ்மத் நிஷா                                                     திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே! சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

அத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ? உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

44, தமிழின பேறுபோற்ற; நடைபோடுவோம்..

ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும் அடங்கா பெருநெருப்பென அகிலம் பரப்பி வெளிச்சமாய் அகன்று வளர்ந்தது தமிழினம்; அடிமைத் தனமகலும் போருக்கு உயிரையும் உதிரத்தையும் – ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும் சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்; கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின் நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் – தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும் கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்; வீரம் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்