Tag Archives: தமிழோசை

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்படியோ இனிக்கிறது தீபாவளி

வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய் ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்; ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில் எப்படியோ இனிக்கிறது தீபாவளி! கண்ணீர் கடன் பட்டினி வறுமை என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்; நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி! குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள் வளர்ச்சித் திட்டம் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம்..

பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும் முதல் வணக்கம், வானத்தில் பூ பூத்து அன்பில் நட்பாய் காய் காய்த்து வார்த்தையில் எளிமை கூட்டி பேசுகையில் இதயக் கூடெங்கும் என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்! என் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம்!!

கவியரங்க தலைப்பு : “குடும்ப உறவுகளின் உன்னதம்” அரங்கம் : ருசி உணவக வளாகம், குவைத் நாள் : 01 – 10 – 2010, வெள்ளியன்று நடந்தேறியது நடத்தி பெருமைசேர்தது : குவைத் தமிழோசை கவியரங்கம் அன்பிற்குரிய பெரியோர்களுக்கும் கவிபாட வந்திருக்கும் என் உறவுகளுக்கும் வணக்கம்! பாடி திரிபவர்களை எல்லாம் பாட்டிற்கு தலைவனாகவும், உடையவனாகவும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அம்மா…”

சோரூட்டியது போகட்டும்; உனை கொஞ்சி தலைகோதி விளையாட அழகு பார்த்தது போகட்டும்; ஊரெல்லாம் உன் வெற்றியை சொல்லி கொண்டாடி வாசலெல்லாம் நீ வருவாயா என காத்திருந்தே வயதை யொழித்த தாயன்பு போகட்டும் – வேறென்ன தான் வேண்டும் ஒரு தாய் பற்றி சொல்லவெனில் நம் செல்ல சகோதரி, வார்த்தையின் வீரியக் காரி கவிதை உச்சரிப்பின் சொல்லழகி … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக