Tag Archives: பண்பாடு

40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காதல் தேரினில் அந்தக் காரிகை போகிறாள்..

1 அந்த தெருமுனை திரும்பும் போதெல்லாம் உன் நினைவு வரும்; நீயுமங்கே நின்றிருப்பாய் நானுனை திரும்பிக்கூட பார்க்காமல் போவேன், நீயும் பார்க்கமாட்டாய்; நாம் பார்க்காவிட்டலென்ன காதல் நம் தெருவெல்லாம் பூத்திருக்கும்.. ————————————————————– 2 காற்றடிக்கும் கண்களை நீ சிமிட்டும் நினைவு வரும்.. நிலா காயும் நீ தெருவில் வந்துநிற்க பூக்கள் சிரிக்கும்.. மேகம் நகரும்.. உன் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35, இலைகள் அசையா மரம் பற்றியும் மனிதன் பற்றியுமான கவலை..

1 மரம் விரிச்சோடிக் கிடந்தது காற்றேயில்லை கயிறு கட்டிலை நம் தாத்தாவோடு நாம் எரித்திருத்தோம்! —————————————————————————– 2 மரம் வெட்டி மரம் வெட்டி மரவெட்டியானான் மனிதன்; மனிதத்தையும் மரத்தோடு வெட்டியிருந்தான்!! —————————————————————————– 3 மின்னல் விழுந்து பனைமரம் எரிந்துபோன கதையெல்லாம் இப்போது நடப்பதில்லை; பனைமரம் வெட்டப்பட்டபோதே மின்னலையும் நிறைய வெட்டிவிட்டோம் நாம்! —————————————————————————– 4 ஒரு … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

வெள்ளைப் பொங்கலும் வாழ்வின் சந்தோச நாட்களும்..

வெள்ளை வெள்ளையாய் பற்கள் சிரிக்கும் வானத்து நட்சத்திரமாய் பானையும் மினுக்கும் மஞ்சள்கொத்து மங்களம் சேர்க்கும் – மண்மணக்கும் சர்க்கரையாய் வெண்பொங்கல் இனிக்கும்; பெண்போற்றும் மண்போற்றும் தமிழருக்குத் திருநாளு; மண்ணாண்ட மன்னவர்கள் மண்ணளந்த நன்னாளு, வலியோர் சிறியோர்க்கு கொடையளித்த ஒருநாளு, தை பிறந்தா வழிபிறக்கும் நம்பிக்கையின் முதன் நாளு; மண்பிசைந்த கைகளுக்கு பானையினால் சோறாச்சி; கற்பூரம் குங்குமம் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

இல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்)

மூப்பில்லா தமிழுக்கும் முடிவில்லா தமிழோசைக்கூட்டத்தின் தலைமைக்கும் கவிவீச்சுள்ள தோழமை உறவுக்கும் எம் பேச்சிற்கு செவிசாய்க்கும் அவைப் பொறுமைக்கும் என் மதிப்பு கூடும் முதல்வணக்கம்.. கை தட்டப் பறக்கும் உள்ளங்கை தூசாக கவலைகள் பரந்து மனசு தமிழால் லேசாகும் நட்பால் நெருங்கநெருங்க அகவேற்றுமை யதுஇல்லாக் காசாகும் சொக்குப்பொடிபோட்டு மயக்கும்தமிழுக்கு ஒற்றுமைஒன்றே மூச்சாகும் – இம் முதல்வெள்ளியின் தருணம் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்