Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

உடைந்த கடவுள் – 35

அன்றெல்லாம் சுடுகாட்டில் இருக்கும் வெட்டியான்களை எல்லாம் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து என்னை பேய் தின்று விடுமோ என்றே பயம் வரும்; இன்றும் அதே பயம் வீடு சுற்றி நாடு சுற்றி மனசாட்சியை கொன்றுகொண்ட பேய்களே உலவுகிறது; சுடுகாடே – மேல்போல்!! ——————————————–

Posted in உடைந்த கடவுள் | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது; வீடற்று இருப்பவர்களை பற்றி அந்த அறைகளுக்கு எந்த கவலைகளும் இல்லை, தெருவில் உண்டு உறங்கி புணர்ந்து தலைமுறைகளை கடக்கும் ஒரு சாமானியனின் தேவை நான்கு சுவர் மட்டுமே என அந்த – வெற்றுக் கட்டிடமான கல் மண் கலவைகளுக்குப் புரிவதேயில்லை! ————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 32

எனக்குத் தெரிந்து கல் சுமக்கும் பீடி சுற்றும் உணவகத்தில் மேசை துடைக்கும் பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும் தேநிர்கொண்டு வந்து கொடுக்கும் சிறுவர்களின் வியர்வையில் தான் நசுக்கப் படுகின்றது நம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான விதைகள்! ————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

‘எப்படியெல்லாம் செய்தால் உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர் ‘ஏன்’ என்றேன் ‘சரி என்ன சொன்னால் கோபப் படுவீர்கள் என்றார் ‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென் ‘அப்போ உங்களுக்கு கோபமே வராதா’ என்றார் ‘நான் சொன்னேனா’ என்றென் ‘அப்போ கோபப் படுவீர்களா’ என்று கேட்டார் ‘படலாம்’ என்றேன் ‘கோபப் அப்டுவீங்களா?!!! கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்