Tag Archives: உடைந்த கடவுள்

உடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி!!

அன்பிற்கினிய உறவுகளுக்கு வணக்கம், பெருமதிப்பிற்குரிய சகோதரி கவிதாயினி திருமதி. லதாராணி அவர்கள் எழுதிய நம் உடைந்த கடவுள் கவிதைத் தொகுப்பிற்கான ஆய்வுரை இங்கே தங்களின் பார்வைக்கு பதிவிடப் படுகிறது. பதிவைப் படிக்க இங்கே சொடுக்கவும்: http://vidhyasaagar.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ புத்தகங்களைப் பெற விரும்புவோர் mukilpublications@gmail.com அல்லது vidhyasagar1976@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மடலெழுதி தொடர்பு கொள்ளலாம். மிக்க நன்றிகளும் … Continue reading

Posted in அணிந்துரை, உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன..

விடுதலையின் சப்தம், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை, பிரிவுக்குப் பின், அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள், எத்தனையோ பொய்கள், உடைந்த கடவுள், சில்லறை சப்தங்கள் போன்ற நம் புத்தகங்கள் வெளியாகி தற்போது விற்பனையில் உள்ளன! நம் படைப்புக்கள் எல்லாம் சென்னையில் ஹிக்கீம்பாதம்ஸ், (நியூ புக் லேன்ட்) புதிய புத்தக உலகம், ஈக்காட்டுத் தாங்கல் மாறன் புக் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

36 சிவப்பு ரத்தத்தின்; கருப்பு ஜூலை!

ஆதிக்க நெருப்பு தின்ற அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற நாள்காட்டியின் சாபமிந்த மறக்கமுடியா – கருப்பு ஜூலை! மனிதக் – கருப்பு மனத்தின் கொலைவெறி முற்றி முற்றும்; முடியாதோரையே அழித்த வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை! சுயநல வெறி சிகப்பாய் ஓடி தாமிரபரணியின் உடம்பெல்லாம் பிணங்களாய் மிதந்து – மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை வெங்காயம் போல் என்றார் யாரோ; உரிக்க உரிக்க கண்ணீராம். உரிபடுவதேயில்லை இப்போதெல்லாம் நிறைய பேரின் வாழ்க்கை; வெங்காயம் என்று வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில் கண்ணீர் மட்டும் மிட்சம் போல். என்னை கேட்டால் வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள் உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள் வாழுங்கள் என்பேன்!! ———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில் நிறைய அறைகள் புழக்கமின்றியே கிடக்கிறது; வீடற்று இருப்பவர்களை பற்றி அந்த அறைகளுக்கு எந்த கவலைகளும் இல்லை, தெருவில் உண்டு உறங்கி புணர்ந்து தலைமுறைகளை கடக்கும் ஒரு சாமானியனின் தேவை நான்கு சுவர் மட்டுமே என அந்த – வெற்றுக் கட்டிடமான கல் மண் கலவைகளுக்குப் புரிவதேயில்லை! ————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக