Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

உடைந்த கடவுள் – 24

தங்கத்தில் தொங்கட்டான் வைரத்தில் மூக்குத்தி பத்து சவரத்தில் தாலி சரடு வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும் பித்தளையில் அண்டாவும் வாலியும் போதா குறைக்கு – மாப்பிள்ளைக்கு வண்டியும் ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்த அப்பாவின் வட்டிப் பணத்தை – கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால் கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 23

மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் -22

குழந்தையோடு தாய்வீடு சென்றிருதேன் ஒரு நாள் மட்டும் குழந்தையை விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா, ஐயோ ஒருநாளா குழந்தையை விட்டுட்டு ஒருநொடி கூட இருக்க முடியாது; உயிரே போய்விடும் என்றார் அவர். அம்மா நமுட்டாக சிரித்தாள், காலத்தின் நீதியும் அம்மாவின் சிரிப்பும் எனக்குப் புரிந்தது; அவருக்கு புரியவில்லை!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

21 தெருவை கடந்த பெரியவர்; விபத்து!

தெருவில் விபத்தாம் கூட்டம் விளக்கிப் பார்த்தேன் உலகத்தின் மொத்த உறவையும் அறுத்துக் கொண்டு விடை பெரும் தருணத்தில் ஒரு பெரியவரின் உயிர் இழுத்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக ரத்தம் சொட்டும் அவர் உடலை ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. அவரின் மூக்கு கண்ணாடி மட்டும் தள்ளி சற்று தூரத்தில் நசுங்காமல் கிடந்தது. ஒன்றுமில்லை … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 20

கனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை!! ——————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்