Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

பள்ளி வாசலில் விற்கும் நெல்லிக்காய் என்றால் உனக்கென்ன அவ்வளவு விருப்பமா’ என்றேன். இல்லையே அப்படியெல்லாம் இல்லையே’ என்றாய். அடிக்கடி வருகிறாயே வெளியே’ என்றேன். நான் நெல்லிக்காய் வாங்கி போய் சாப்பிட்டதே இல்லை’ என்றாய். அப்படியா.. பிறகு ஏன் ஒருநாளைக்கு அத்தனை முறை வந்து போகிறாய்’ என்றேன் நெல்லிக்காய் விற்கும் கிழவி மீது காஆஅ….தல் என்றாய்’ கோபமாக … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்.., வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

நம்மூர் கோவிலில் நீயும் நானும் ஒன்றாக சாமி சுத்தி வந்த நாட்களில்; நான் பார்க்காத நேரத்தில் நீயும் – நீ பார்க்காத நேரத்தில் நானும் பார்த்துக்கொண்டது சாமிக்கு மட்டுமே தெரியும்!! ————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

26 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

கோவிலில் பிரசாதம் தருகிறார்கள். நீ ஓடிவந்து ஓடிவந்து வாங்கினாய். நான் கூட ரொம்ப பசியோ என்று நினைத்தேன். பிறகு வெளியே வருகையில் எனை வாழ்த்திய பிச்சை காரர்களால் புரிந்தது – நீ எனை பார்க்கத் தான் அத்தனை முறை வந்து போனாய் என்று!! —————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

வா.. அந்த மரத்தில் ஒரு சொப்பு தூளி கட்டி அதில் காகிதம் சுற்றி அந்த காகிதத்தில் உன் பெயரையும் என் பெயரையும் எழுதினால் சாமி நம்மை சேர்த்து விடுமாம்; நாமும் கட்டி வைப்போம் நம் சமூகம் ஒருவேளை நம்மை பிரித்துவிட்டால் இந்த சொப்பு தூளி – நம்மை காதலர்களென்று சொல்லியே ஆடிக் கொண்டிருக்கும்!! ——————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக