Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

அந்நிய தேசத்தில் அழுகிறானவன் (சிறுகதை)

தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றை கையில் விரித்து படித்துகொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பதுபோல் வந்து ஒதுங்கி போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக்கொள்ளும் பிரஜைகளை கொண்ட அரபு தேசத்தின் வாசம் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

54 திறந்த ஜன்னலோரம்; அவள்!!

நான் பார்த்த ஜன்னலில் அன்று உலகம் – மிகச் சிறியதாகவே தெரிந்தது. மனிதர்கள் பெரியவர்களாய் தெரிந்தார்கள். மரம் செடி கொடிகள் வெகு சிநேகமாகவே அசைந்துக் கொண்டிருந்தன. சிட்டுக் குருவிகளெல்லாம் அருகில் வந்து எனக்காகவே எனை பார்த்து பார்த்து கத்திச் சென்றது.. நாயும் பூனையும் வாலை குழைத்து முகத்தை வருடக் காத்திருந்தன. புல்மேல் விழுந்த பனித் துளிகள் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

53 நரைத்தும் மறக்காத பொழுதுகள்; காதல்!

குழந்தைகள் அன்பான மனைவி நல்ல குடும்பமெனும் பெயருக்கு மத்தியில் மட்டும் எப்படி மறப்பதோ உன் நினைவை, இதயம் சுட்டு சுட்டு வலிக்கும் உன் ஞாபாகமும் பார்வையும் எனக்குள் மட்டுமே கனத்துக் கழியும் இக்காலம் – எப்படியேனும் தீர்ந்தேனும் போகாதா, என்றோ காதலித்தோம் இரண்டு வீட்டின் நன்மைக்காய் பிரிந்தோம் – பிரிந்திப்படி உயிர்தின்று வாழ எப்படி சம்மதித்துக் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

52 அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!

அதோ பார்; எல்லோரும் நடந்து செல்கிறார்கள், நான் மட்டுமே நீயின்றி இறந்து செல்கிறேன்! உலகம் கைகாட்டிய ஆயிரம் காரனங்களுக்கிடையே நீ பிரிந்து விட்டாய் – உனை மறக்க இயலாத ஒற்றை காரணத்தால் நினைத்து நினைத்துருகி – நாணற்றுப் போகிறேன் நான்! உனக்கொன்று தெரியுமா.. உனக்காக நான் சிந்தாதக் கண்ணீரெடுத்து உலகத்தையே நனைத்துவிடலாம்; உனக்காகக கனக்கும் இதயத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

34 கிழித்தெறிந்த காகிதம்; காட்டினை அழித்தது!

எழுதி நிறைந்ததில் கவிதையானது – கதைகளானது – புத்தகமானது; கிழித்து கிழித்து எரிந்ததில் – குப்பையானது; காகிதம்! கண்ணீரில் மை தீட்டி எண்ணம் வார்த்ததில் கடிதமானது; நினைவுகளை சுமந்து வந்ததில் பொக்கிசமானது; காகிதம்! கடவுளை பற்றி எழுதியதில் புனிதமானது காலம் கடந்ததை எழுதி வரலாறானது காலிடறி பட்டாலும் தொட்டுக் கும்பிடவைத்தது; காகிதம்! எரிந்ததில் சாம்பலானது எழுதிவைக்க … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக