Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

49 ஒரு தமிழனின் கனவு!!

ரத்தம் ஊறிய மண்ணில் ஓர் தினம் புலிக்கொடி – பட்டொளி வீசிப் பறக்கும்; இது கனவென்று நினைக்கிறார்கள் சிலர்; ஆம் கனவு தான் தமிழனின் கனவு!!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ஒரு நூறு தெரு தள்ளி தான் கேட்கிறதந்த சப்தம்; கண்ணீரால் யாரையோ கூப்பாடு போட்டழைக்கும் ஒரு ஓலம் அது; சுலபமாய் சொன்னால் மரணம் எனலாம், வாழ்பவன் கற்றும் தெளியாத அல்லது – கற்காத பாடம். மரணம் என்றாலே நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு மரணமின்றியே இயங்குகிறது நிறைய சதைகள்; ஆம், ஜாதி பேசி மதம் பேசி இனம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“குவைத் பொங்கு மன்றத்தின் கலை இலக்கிய விழா”

முன்பாகவே வாழ்த்தி மகிழ்ந்த அன்புள்ளங்களுக்கு நன்றி! 21.05.10, வெள்ளிக் கிழமை மாலை ஆறு மணியளவில், குவைத் பிந்தாஸ் அரங்கத்தில் விழா துவங்கி இரவு பத்து மணிவரை, மிக சிறப்பாகவும், தமிழரின் சிறப்பு இப்படித் தான் இருக்கும் என்பதாகவும், தமிழர் விழாக்களை இப்படி நடத்துங்கள் என நம் பண்பினை மீண்டும் நமக்கே போதிப்பதாகவும், நாட்டியம் கிராமியப் பாடல்கள், … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

மனதை – சுட்டு சுட்டு பொசுக்கியதாய் ஒரு கனாக் கண்டேன்; வானம் தொடாத வாழ்க்கை வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு கனாக் கண்டேன்; யார் கண் பட்டதை நம்பவில்லை சுத்திப் போட்டதை ஏற்கவில்லை தெய்வம் ஒன்றே போதுமென்றதில் நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன், சொல்ல நா – எழவில்லை சொல்லி சொல்லியும் மனதாரவில்லை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்