Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு சம்பாதிக்கும் பணம் – இரக்கமின்றி தின்கிறது நம் – சந்தோசங்களையும் சிரிப்பையும்; இருந்தும் – உலகிற்கு நாம் நலமென்றே தெரிகிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 58

இங்கு நான் கடக்கும் – ஒவ்வொரு கணமும் நீயில்லாத சொர்கத்தை இழக்கும் – ஒவ்வொரு – துளிகள் என்பதை யாரறிவார்!!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 57

ஐயோ கடிதம் அனுப்பக் கூட கையில் பணமில்லையே – என நீ அழுத அழையில், கடிதமில்லாமலே புரிந்துவிட்டது – நீ எழுதித் தீர்த்திடாத உன் அத்தனை பாரங்களும்!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 56

ஒரு சில பொய்களில் ஜெயிக்கிறது சிலரின் – உண்மையற்ற வாழ்க்கை; நானென் உண்மையை உன் பொய்யற்ற அன்பில் வெல்ல நினைக்கையில் – உனக்கும் எனக்குமிடையே குவைத்தும் இந்தியாவுமாய் எத்தனை பெரிய தூரம்!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 55

உறங்குவதற்கு விளக்கை அணைக்கும் ஒவ்வொரு இரவிலும் – விழித்துக் கொண்டு அலறுகின்ற உன் – அத்தனை நினைவுகளால் உறங்காமலே பூக்கின்றன கனவு பூக்கள் – படுக்கையை நனைத்த கண்ணீரின் ஈரத்தில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்