Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

பிரிவுக்குப் பின் – 38

எனக்கு முத்தம் கொடுக்க உனக்குப் பிடிக்குமா? எனக்கு மிகப் பிடிக்கும் நான் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறேன் என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும் உன் இதயத்தை சற்று தொட்டு இதழ்களில் பதிந்த ஈரம் பார் அதில் – நானுமிருப்பேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 37

உனக்கும் எனக்குமொரு ஒப்பந்தம். இன்றிரவு எட்டு மணிக்கு நீயும் வெளியே – வந்து நில்; நானும் – நிற்கிறேன்; நம் முகம் தெரியாவிட்டாலென்ன, நிலவிற்காவது நம்முகம் – ஒருசேர தெரியட்டுமே!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 36

சாமிக்குத் தந்த அர்ச்சனையில் – தவறுதலாய்.. உன் பெயரை – எழுதிவிட்டேன்; பரவாயில்லை- உனக்கும் எனக்குமாய் நடுவில் நிற்பது – அந்த – சாமி மட்டும் தானே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 35

நீயும் நானும் சேர்ந்திருந்த நாட்களில்- உன்னை தான் எனக்கு சரியாகப் புரியவில்லை என்பேன்; உன்னைவிட்டு வந்த பிறகு- என்னையே கூட எனக்கே – புரிய மறுக்கிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 34

நான் குளிக்கும் போது ஊற்றிய நீரில் உப்புக் கரித்ததே மிச்சம்; வாளி நீரில் கண்ணீரே – கலங்கலாக!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக