Category Archives: என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

என் தமிழரின் பண்பு மாறாது வணக்கம் சொல்லி உள்நுழைந்த பாதை!

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த வாழ்வின் போராட்டங்களில் மறவாத ஏதோ ஒரு – சம்பவத்தையேனும் – நினைவு படுத்தி விடுகிறது; ஏதேனும் ஒரு கவிதை! எனவே கவிதை எழுதுங்கள் – காலை வணக்கமும் உரித்தாகட்டும்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

கொட்டிக் கிடக்கட்டும் தங்கம்

கொட்டிக் கிடக்கட்டும் தங்கம் வாரி இறைக்கட்டும் வெள்ளி வைடூரியம் எழுதி கொடுக்கட்டும் வீடும் தொரவும் தோட்டமும் யாருக்கு வேணும்… எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கொரு கவிதை போதும் – உங்களுக்கு வணக்கம் சொல்ல! இனிய அன்பு வணக்கம் தோழர்களே..

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்கையில் என்ன செய்தோம்

வக்கிரம் கோபம் சுயநலம் கருத்து வேறுபாடு தாண்டி தமிழுக்காய் இணைந்திருப்போம் தோழர்களே! வாழ்கையில் என்ன செய்தோமோ முழுதாய் வரலாறு – அறியப்போவதில்லை; போகட்டும், விட்டுசெல்கையில் என்னவைத்தோமென – வரலாறு தன் சிறப்பேட்டில் குறித்துக் கொள்ள வாழ்ந்துக் காட்டுவோம் தோழர்களே! இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

உலகின் – நீல அகலங்களை தாண்டி

உலகின் நீல அகலங்களை தாண்டி ஒட்டித் தான் கொள்கிறது மனசு; அன்பென்னும் ஒற்றை வார்த்தையில்! இனிய வணக்கமென் அன்பு உறவுகளே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

தடுக்கி விழுந்த இடத்தில்

நீ தடுக்கி விழுந்த இடத்தில் கட்டிப் பிடித்து காப்பாற்றினேனே அப்போது கை தவறி விழுந்ததென் இதயம்! (சும்மா ஒரு உடான்ஸ் தோழர்களே..) இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக