Category Archives: என் இனிய உறவுகளுக்கு வணக்கம்

என் தமிழரின் பண்பு மாறாது வணக்கம் சொல்லி உள்நுழைந்த பாதை!

காலம் கடக்கும் ஒவ்வொரு பொழுதுகளையும்

காலம் கடக்கும் ஒவ்வொரு பொழுதுகளையும் நம் அன்பில் நனைத்து வாழ்வின் – நினைவுகளாய் பதிந்துக் கொள்வோம் வாருங்கள் தோழர்களே… அனைவருக்கும் இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வானவில் அழகில்

ஒரு வானவில் அழகில் – குழந்தை சிரிக்கும் கொஞ்சும் சிரிப்பில் – கட்டி அனைத்த நண்பனின் இறுக்கத்தில் – காதலி பேசும் கடைக்கண் பார்வையில் – அம்மா தலை சாய்த்துக் கொண்ட மடியினின்பமென – எங்கெங்கோ சுற்றி விளயாடுமின்பம் தமிழில் ஒரு கவிதை புனைந்ததாய் உணர்கையில் வருவதே பேறு! இனிய அன்பு வணக்கம் தோழர்களே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

என் விரல் பிடிக்காத வானம்

என் விரல் பிடிக்காத – வானம்; என் கால்கள் மிதித்திடாத பூமி; என் தலை மேல் தாங்குமென் வாழ்விடம்; அவ்வப்பொழுது தொட்டு சிலிர்க்க வைத்து – தன்னை முழுதாக அறிந்து கொள்ள விடாததொரு – காலம் விழுங்கிய தோற்றம்; நிறைவுறாத இயக்கம் நம்மை எல்லாம் இயக்கி இணைக்கும் தமிழுக்கும், அத்தமிழை சிறப்பிக்குமென் தமிழுறவிற்கும் – அன்பு … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

கடலை கொன்றுவிடும்

கடலை கொன்றுவிடும் ஒருசொட்டுக் கண்ணீரை தாண்டி தான் – சிரிக்க வேண்டியிருக்கிறது நம் வாழ்க்கையில்; ஆயினும் – அவ்வப்பொழுது உங்களை சந்திப்பதில் எனை மறந்து – கடலாய் மிஞ்சித் தான் விடுகின்றன – சில சந்தோச அலைகள்! இனிய காலை வணக்கம் உறவுகளே!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

இனிய வணக்கம்!

வானம் வசப்படும் வெற்றி தத்துவம் வேறொன்றுமில்லை; உழைப்பன்றி! என் அன்புள்ளங்களுக்கென் இனிய வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக