Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

39 தமிழால் தானுயர்வோம்..

தடதடவென உயிர் துடித்தொரு வீரதீர உணர்வெழுந்தொரு – மார்புகூடு பதைபதைத்தொரு – மானம் காக்க புயல்வரும் செயல் அதுபோல் – தமிழா; நாடு காக்க முடிவெடு முதல் மக்கள் காக்க துணிந்தெழு முதல் மண்ணின் வீரம் நரம்புப் புடைக்க திண்ணைப் பேச்சும் மண்ணை காக்க – தமிழா; வீரமறவன் குடித்த பாலின் வெற்றிக் கொண்ட பண்டைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., பாடல்கள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உழைத்தவருக்காய்; செங்கரும்பும், சீனிப் பொங்கலும்!!

காற்றிற்கு குறுக்கே கயிறு கட்டி ஏறிநடந்த தூர அளவிற்கு வந்து விழுந்த சில்லறையில் – ஒற்றை ரூபாய்க்கு அரிசி கிடைக்கும் – சீனி கிடைக்குமா? கலை குடும்பம், பாரம்பரியம், பரம்பரை தொழில் என்றெல்லாம் சொல்லி – நாயனம் ஊதியவருக்கும், தபேலா அடித்தவருக்கும் பொங்கலை தொலைகாட்சியில் பார்க்கலாம் வீட்டில் கொண்டாட இயலுமா? பிற வீடுகளில் பாத்திரம் தேய்த்து, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

38 அம்மாயெனும் தூரிகையே..

என் வாழ்வின் ஓவியத்தை வரையும் தூரிகையே – உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில் அழகுடன் மின்னுபவன் நான்; பாட்டின் ஜதிபோல எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே – உன் அசைவில் மட்டுமே அசைந்து – நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்; நடைபாதையின் முட்களை மிதித்து – என் கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன – அர்ப்பணமே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும் எம் சந்தக் கவியும் ஜதிபாடும், உள்ளும் புறமும் அழகாகும் தமிழ் எங்கும் எதிலும் முதலாகும், மொழியும் உயிரும் ஒன்றாகும் அதிலும் தமிழே சிறப்பாகும்.., கம்ப நாத கவிமலரே.. கடல் காற்று வானமென கலந்த தமிழழகே; என் உச்சுமுதல் நிறைந்தவளே நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்! பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும் தோழமை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

எப்படியோ இனிக்கிறது தீபாவளி

வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய் ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்; ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில் எப்படியோ இனிக்கிறது தீபாவளி! கண்ணீர் கடன் பட்டினி வறுமை என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்; நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி! குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள் வளர்ச்சித் திட்டம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக