Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும் தெருவில் நடக்கிறோம் அவன் எதிரே வரும் போகும் பெண்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான் ஐயோ இப்படிப் பார்கிறானே என்று உள்ளே சற்று வலிக்கையில் – என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தவறுகளுக்கு தண்டனையாக தோல்வி வேண்டாம்; வேண்டுமெனில் – மரணம் கிடைக்கட்டும்! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 அரைகுடத்தின் நீரலைகள்..

வாசலில் பூத்த மலர்களில்; நிறைய மலர்கள் எனக்கானதல்ல!! ———————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

வாழ்வின் சுவர்களில் கொட்டை எழுத்தில் எழுதப் படுகிறது மரணம்; படிக்க மட்டுமே நாளாகிறது! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எத்தனையோ பேரின் மரணத்தில் நிகழ்வதில்லை பாடம்; என் வீட்டின் ஒரு சின்ன மரணம் மாற்றி விடுகிறது என் பாதையையும் வாழ்க்கையையும், வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில் பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில் நிகழ்கிறது – தனக்கான மரணம்! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக