Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

39 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

யாரும் பயந்துவிடாதீர்கள் பயம் கொள்வதால் விட்டாசெல்கிறது மரணம்? விட்டு செல்லுங்கள் மரணத்தை துணிவிருந்தால் வந்து நம்மை பெற்றுக் கொள்ளட்டும் மரணம்; பெறாத மரணத்தில் எனக்கென்னவோ வாழ்வதாகவே தெரியவில்லை – நிறைய பேரின் வாழ்க்கை! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

38 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எ ன்ன தான் மனிதன் செய்தாலும் – மனிதனை செத்து தொலை என்று சொல்ல விடுவதேயில்லை மரணம்; மீறி சிலர் சொல்கிறார்கள் ஏன்; கொலை கூட செய்கிறார்கள் மனிதரற்றோர்; மரணம் அவர்களை மன்னிப்பதேயில்லை, மாறாக தினம் தினம் கொள்கிறது, கடைசி ஓர்நாளில் அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

37 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

பெரிய மிராசுதார் பிச்சைக்காரன் ஆண் பென் சாமி குடிகாரன் திருடன் நல்லவன் கெட்டவன் யாரையுமே பார்ப்பதில்லை மரணம்; ஆனால் – நெருங்கும் முன் நன்றாக; பார்த்துக் கொள்கிறது! ————————————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

36 அரைகுடத்தின் நீரலைகள்..

எத்தனைமுறை அழைத்தாலும் என்ன தான் எழுதினாலும் எழுதிக் கொண்டே இருக்கிறது அம்மா பற்றி மனசு! —————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 அரைகுடத்தின் நீரலைகள்..

எனக்கொரு எழுதுகோலும், சில தாள்களும், மூன்று வேலையின் ஒன்றில்; ஒரு கிண்ணம் சோறும், அவ்வப்பொழுது குவளை தேநீரும் கொடுத்துவிட்டு – வாழ்தலின் மீதமான – அத்தனையையும் எடுத்துக் கொள் உலகினமே; அந்த வாழ்தலில் உனக்காகவும் பேசப் பட்டிருக்கிறோம்! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக