Category Archives: எத்தனையோ பொய்கள்

சின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..

ஹைக்கூ –79

யாருக்காக நான் சேர்த்தேனோ தெரியவில்லை அடுக்கு மாடி கட்டிடத்தின் மண் மட்டுமே – என் இறப்பை மூடியது!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –78

எங்கோ என்றோ யாருடனோ பேசிய நினைவுடனே தேடுகிறேன் யார் யாரோ எதிரில் வருகிறார்கள் யாருமே – நான் தேடியவரல்ல!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –77

பிடிக்கவில்லை என ஒரு முறை சொல்லியாவது விடு; நீ பேசியதை – குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –76

ஒரு காதல் கடிதமெழுதிடாத உன் பார்வையில் தான் நான் பெரிய புள்ளியாய்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –75

எப்படி எல்லாம் நினைத்துக் கொண்டாயோ நினைப்பாய் என்பதை மட்டும் நினைத்துக் கொள்கிறேன் நான்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக