Category Archives: கண்ணீர் வற்றாத காயங்கள்..

எழுதாத தலையெழுத்திற்கு, அழுதுத் தீர்த்த தருணத்தை; எழுதியேனும் வைக்கத் துணிந்தப் பதிவு..

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி!

ஒன்று சேர் ஏனென்று கேள் எட்டி சட்டைப்பிடி இல்லை – மனிதரென்று தன்னைச் சொல்லிக் கொள்வதையேனும் நிறுத்து; தன் கண்முன் தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் – அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து நம்மை மனிதரென்று சொல்ல நாக்கூசவில்லையோ??? கண்முன் படம் படமாய் பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து அந்த … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்