Category Archives: ஞானமடா நீயெனக்கு

75 ஞானமடா நீயெனக்கு..

1 சிலநேரம் நீ வயிற்றிற்குள் அசைவதே இல்லை, பதறி போவேன்.. சூடாக ஏதேனும் குடி அசையும் என்பார் அம்மா., சூடு ஒருவேளை உனக்கு பட்டுவிடுமோ’ என்று அஞ்சி யாருமில்லா அறைக்கு சென்று வயிற்றில் கை வைத்து ஏய்……. என்ன செய்கிறாய்; அப்பாவிடம் சொல்லவா என்பேன், எட்டி………… ஒரு உதை விடுவாய் நீ எனக்குத் தான் சுளீர் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

70) ஞானமடா நீயெனக்கு..

1 நீ எட்டி எட்டி உதைத்துக் கொண்டிருந்த எத்தனையோ நாட்களின் – என் தூக்கம்; உன் காலடியில் தான் இமைகிழிந்துக் கிடந்தது!! ———————————————– 2 நீ சாப்பிட்டு வைத்த மிச்சத்தை எடுத்துக் கொண்டு உடம்பெல்லாம் ஓடியது என் ரத்தம்! ——————————————- 3 உனையும் பாப்பாவையும் மாற்றி மாற்றி கொஞ்சுவோம், உனக்கு தெரியாமல் அவளிடமும் அவளுக்கு தெரியாமல் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு 65

நீ மூத்தவன் ஆனதையும் நாங்கள் இரண்டாம் முறையாய் – பெற்றோர் ஆனதையும் – இன்று தெரிந்து கொண்டு அவள் வயிற்றில் கை வைத்து – செல்லமே நல்லா இருக்கீங்களா……….’ என்று புன்னகைத்ததும் – நீ இங்கும் அங்கும் திரும்பி பார்த்துவிட்டு உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் – நான் யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 64

அது எப்படியோ – மூத்த பிள்ளை இளைய பிள்ளையால் சலித்துவிடும் என்கிறார்கள்; எனக்கு நூற்றியோர் பிள்ளைகள் பிறந்தாலும், நீயும் சலிக்கமாட்டாய் – மீதம் – நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’ என்று தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக